மேன் சிட்டியை ஊதித்தள்ளிய லெஸ்டர்

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் தர வரிசைப் பட்டியலின் முத- லிடத்தில் இருக்கும் லெஸ்டர் சிட்டி குழு தங்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் மான்செஸ்டர் சிட்டி குழுவை அதிரவைத்துள்ளது. நேற்று முன்தினம் மான்செஸ்டர் சிட்டியின் சொந்த மைதானத்தில் நடந்த போட்டியில் அது சர்வ சாதாரணமாக 3-1 என்ற கோல் எண்ணிக்கையில் மேன்சிட்டி குழுவை ஊதித்தள்ளியது. இதில் ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே லெஸ்டரின் ரியாட் மஹ்ரேஸ் கொடுத்த பந்தை அந்த அணியின் ராபர்ட் ஹுத் கோலாக்கினார்.

இந்த பரபரப்பு அடங்குமுன் ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் மஹ்ரேசே இரண்டாவது கோலை யும் போட்டு மேன்சிட்டியைத் திக்குமுக்காட வைத்தார். பின்னர் தங்களுக்குக் கிடைத்த 'கார்னர் கிக்' வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட லெஸ்டர் ராபர்ட் ஹுத் மூலம் மூன்றாவது கோலையும் போட்டு மேன்சிட்டி ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியாத அளவுக்கு வெற்றி பெற்றது.

மான்செஸ்டர் சிட்டியின் சொந்த மைதானமான எட்டிஹாட்டில் நேற்று முன்தினம் அதனுடன் மோதிய லெஸ்டர் சிட்டி குழு, சற்றும் அலட்டிக் கொள்ளாமல் மேன்சிட்டியை 3=1 என்ற கோல் எண்ணிக்கையில் ஊதித் தள்ளியது. அதில் இரண்டாவது கோல் போட்ட மகிழ்ச்சியில் லெஸ்டர் சிட்டியின் ரியாட் மஹ்ரேஸ் (கறுப்பு சீருடையில்). படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!