பிள்ளையாரை வழிபடும் தமன்னா

பிள்ளையாரை வழிபடாதே நாளே இல்லை என்கிறார் நடிகை தமன்னா. "நான் நடிகையானதில் மகிழ்ச்சியடைகிறேன். திரையுலகில் நாள்தோறும் புதிய அனுபவங்கள் கிடைக்கின்றன. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் அமைகின்றன. 'பாகுபலி' படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம். கஷ்டப்பட்டு அதில் நடித்தேன். ரசிகர்களிடம் இருந்து பாராட்டுகளையும் பெற்றேன். "தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிக்கிறேன். அதனால்தான் திரையுலகில் நிலைத்து இருக்க முடிகிறது. எனக்குக் கடவுள் நம்பிக்கை அதிகம் உண்டு. கடவுள் அருளால்தான் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறேன். எனக்குப் பிடித்த கடவுள் சித்தி விநாயகர்.

"ஒவ்வொரு நாளும் விநாயகரை வணங்கி விட்டுத்தான் வேலைகளைத் தொடங்குவேன். எனக்குப் பேராசைகள் கிடையாது. இப்போது எப்படி இருக்கின் றேனோ அந்த வாழ்க்கை நிலைத்து இருந்தால் போதுமானது. "கடவுள் நேரில் வந்தால் ஒவ்வொருவரும் அவர்களுக்கு வேண்டியதை கேட்பார்கள். ஆனால் நான் எதுவும் கேட்க மாட்டேன். கடவுள் எனக்கு ஏற்கெனவே அளவுக்கு மீறி நிறைய கொடுத்து விட்டார். எனவே கடவுளை நேரில் பார்த்தால் அவருக்கு நன்றி மட்டுமே சொல்வேன்," என்று தமன்னா கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!