திறன்மிக்க சிங்கப்பூரர்களை ஈர்க்க பொறியியல் பற்றிய மனப்போக்கு மாறவேண்டும்

அமெரிக்காவில் உள்ள சிலிக் கன் வேலியின் வெற்றியை சிங்கப்பூர் பெறவேண்டும் என்றால் அங்கு பணி புரியும் திறன்மிக்க சிங்கப்பூரர்களை மீண்டும் இங்கு கொண்டு வர பொறியியல் மீதான மனப்போக்கு மாறவேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் அறிவுறுத்தியுள்ளார். தமது அமெரிக்கப் பயணத்தின் போது சிலிக்கன் வேலியிலும் சான் ஃபிரான்சிஸ்கோவிலும் பணியாற்றி வரும் பல சிங்கப்பூரர்களைக் கண்டு பேசிய திரு லீ அவர்களால் நாட்டுக்கு ஆற்றக்கூடிய பங்கு அதிகம் என்றார். ஆனால் அவர்களை மீண்டும் சிங்கப்பூருக்குக் ஈர்க்க அங்கு அவர்களுக்குக் கொடுக்கப்படும்

அதே சவால்களை இங்கும் கொடுக்க வேண்டும் என்றார். "சம்பளத்தையோ வேலை கிடைப்பதையோ மட்டும் இது சார்ந்ததல்ல. ஆனால் அதே சவால்களையும் தொழில்நுட்ப தேவைகளையும் இங்கு உருவாக் குவது முக்கியம்," என்று சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் திரு லீ. பொறியியலாளர்களின் மதிப்பு அமெரிக்க பொறியியல் துறையால் அங்கீகரிக்கப்பட்டு உணரப் படுகிறது என்று சிங்கப்பூரர் உட்பட பலர் தம்மிடம் கூறியுள்ளனர் என்றும் ஆனால் சிங்கப்பூரில் அந்த போக்கு இல்லை என்றும் சுட்டினார் பிரதமர் லீ.

அமெரிக்காவில் ஃபேஸ்புக் நிறுவனத்திற்காகப் பணிபுரியும் சிங்கப்பூரர்களைச் சந்தித்துப் பேசுகிறார் பிரதமர் லீ சியன் லூங். படம்:எம்சிஐ

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!