இஸ்தானாவின் முதன்மை கட்டடம் மே 7 அன்று பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும். கொவிட்-19 தொற்றுத் தொடங்கிய காலத்திலிருந்து அது மக்களுக்குத் திறந்துவிடப்படுவது இதுவே முதல்முறை.
மே 1ஆம் தேதியன்று வரும் மே தினம், மே 3ஆம் தேதி கொண்டாப்படும் நோன்புப் பெருநாள் ஆகிய பொது விடுமுறைகளை முன்னிட்டு இஸ்தானா திறந்துவிடப்படும்.
வருகையாளர்கள் நுழைவுச்சீட்டுகளுக்கு முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளவேண்டும். ஒவ்வொருவருக்கும் தலா ஐந்து நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படும் என அதிபர் அலுவலகம் தெரிவித்தது.
இஸ்தானா வளாகத்துக்குள் நுழைவதற்குக் கட்டணம் இல்லை. ஆனால், அதன் முதன்மை கட்டடத்திற்குள் செல்ல $2 கட்டவேண்டும்.
பொதுவாக இருக்கும் எந்த இசை நிகழ்ச்சிகளும், சுற்றுலாக்களும், உணவுக்கடைகளும் இம்முறை இருக்காது.
நுழைவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்க இந்த இணையத்தளத்தை நாடாலம்: https://istanaoh.myevent360.com/122/participation_form