ரெய்னா: மெக்கெல்லமின் சாதனையை இந்திய வீரர் முறியடிப்பார் என நம்புகிறேன்

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தமது கடைசி டெஸ்ட்டில் விளையாடும் நியூசிலாந்தின் மெக்கெல்லம் 54 பந்துகளில் சதம் அடித்து புதிய சாதனை படைத்தார். இந்நிலையில், ஐபிஎல் தொடரில் புதிதாக சேர்க்கப் பட்டுள்ள குஜராத் லயன்ஸ் அணியின் சீருடையை வெளி யிடும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் புதுடெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அந்த அணியின் தலைவர் ரெய்னா இதுகுறித்துப் பேசினார்.

"மெக்கெல்லமின் சாதனை யைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதே சமயம் ஓர் இந்தியர் அந்த சாதனையை முறியடிப்பார் என்று நம்புகிறேன். "குஜராத் லயன்ஸ் அணியில் மெக்கெல்லம் இடம் பெற்றுள்ளது மகிழ்ச்சியான விஷயம். அவர் துணிச்சலுடன் விளையாடும் வீரர். அவரைப் போன்ற வீரர்கள் தான் எங்கள் அணிக்குத் தேவை. "என்னைப் பொறுத்தவரையில் அணித் தலைவர் என்பது ஒரு பதவி மட்டும்தான். "சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகத் தொடர்ந்து எட்டு ஆண்டுகள் விளையாடினேன். அந்தப் பசுமையான நினைவுகளை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது," என்றார் ரெய்னா.

குஜராத் லயன்ஸ் அணியின் சீருடை வெளியிடும் நிகழ்ச்சியில் சுரேஷ் ரெய்னா. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!