அண்மைய

நைரோபி: கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தலைநகர் நைரோபி உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன.
கோலாலம்பூர்: மைக்ரோசாஃப்ட் நிறுவனம், மலேசியாவில் செயற்கை நுண்ணறிவு, மேகக் கணிமை ஆகிய துறைகளில் 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் (S$3 பில்லியன்) முதலீடு செய்ய மே 2ஆம் தேதி உறுதியளித்துள்ளது.
ஹோனலூலு: தென்சீனக் கடலில் பிலிப்பீன்சுக்குச் சொந்தமான கப்பல்களைச் சேதப்படுத்தியதும் அதிலிருந்த சிப்பந்திகளுக்குக் காயம் ஏற்படுத்தியதும் பொறுப்பற்ற நடவடிக்கை என்றும் அனைத்துலகச் சட்டத்தை மீறிய செயல் என்றும் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் கூறியுள்ளார்.
லாஸ் ஏஞ்சலிஸ்: 2019ஆம் ஆண்டு தெற்குக் கலிஃபோர்னியாவின் கரையருகே படகு ஒன்று தீப்பிடித்ததில் 33 பயணிகளும் சிப்பந்திகளும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அப்படகின் மாலுமிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிரான சிங்கப்பூரின் விழிப்புநிலையைச் சோதிக்கும் வகையில், ஏப்ரல் 30, மே 1 ஆகிய தேதிகளில், பல்வேறு அரசாங்க அமைப்புகள் இணைந்து பயங்கரவாதத் தடுப்பு பாவனைப் பயிற்சியில் ஈடுபட்டன.