பொய்த் தகவலைத் திருத்த பொஃப்மா அலுவலகம் உத்தரவு

சிங்­கப்­பூ­ரில் கொரோனா கிருமி பர­வும் இட­மாக அடை­யா­ளம் காணப்­பட்­டுள்ள சாஃப்ரா ஜூரோங் பகு­தி­யில் நடை­பெற்ற இரவு விருந்து நிகழ்ச்­சி­யின் ஏற்­பாட்­டிற்கு மக்­கள் கழ­கத்­திற்­கும் வசிப்­போர் குழுக்­க­ளுக்­கும் சம்­பந்­தம் இருந்­த­தாக குறிப்­பி­டும் பொய்த் தக­வ­லைத் திருத்த, ஃபேஸ்புக் பய­னா­ளர்­கள் மூவ­ருக்கு அர­சாங்­கம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

எதிர்க்­கட்சி அர­சி­யல்­வா­தி­யும் வழக்­க­றி­ஞ­ரு­மான லிம் திய­னும் அந்த மூன்று பேரில் அடங்­கு­வார். சிங்­கப்­பூர் எதிர்க்­கட்­சி­யான ‘மக்­க­ளின் குரல்’ கட்­சி­யின் தலை­வ­ரா­வார் அவர். “ஹென்­ரி­ஏஸ் ஏஸ்”, செபஸ்­டி­யன் யிங் ஆகி­யோர் எஞ்­சிய இரு­வர். பிப்­ர­வரி 15ஆம் தேதி நடை­பெற்ற அந்த சீனப் புத்­தாண்டு இரவு விருந்து நிகழ்ச்­சி­யில் கலந்து­கொண்ட பல­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­ட­தற்கு மக்­கள் கழ­க­மும் வசிப்­போர் குழுக்­க­ளுமே பொறுப்பு என்று மேற்­கு­றிப்­பி­டப்­பட்ட அந்த மூவ­ரும் பதி­விட்­டி­ருந்­த­னர்.

அவர்­கள் பதி­விட்ட பொய்த் தக­வ­லைத் திருத்த உத்­த­ர­வி­டும்­படி மக்­கள் கழ­கத்­தின் துணைத் தலை­வர் சான் சுன் சிங் கூறி­ய­தாக இணை­யம்­வழி பொய்­யு­ரைக்­கும் சூழ்ச்­சித்­தி­றத்­திற்­கும் எதி­ரான பாது­காப்­புச் சட்ட (பொஃப்மா) அலு­வ­ல­கம் நேற்று வெளி­யிட்ட அறிக்கை ஒன்­றில் குறிப்­பிட்­டது.

இரவு விருந்து நிகழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­ததில் மக்­கள் கழ­கத்­திற்­கும் வசிப்­போர் குழுக்­க­ளுக்­கும் சம்­பந்­தம் இருந்­த­தா­கக் குறிப்­பி­டும் பதி­வு­கள் “முற்­றி­லும் பொய்­யா­னவை” என்று உண்­மை­யான தக­வ­லைச் சரி­பார்க்­கும் இணை­யப்­பக்­க­மான ‘Factually’யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

“அந்த நிகழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­ததில் மக்­கள் கழ­கத்­திற்­கும் வசிப்­போர் குழுக்­க­ளுக்­கும் தொடர்­பில்லை. நிகழ்ச்­சியை ரத்து செய்­வ­தற்­கான நிலை­யி­லும் அவை இல்லை. நிகழ்ச்­சிக்கு அவை நிதி வழங்­கவோ விளம்­ப­ரப்­ப­டுத்­தவோ இல்லை. பாடல் சொல்­லித் தரும் ஒரு­வர், அவ­ரது பாடல் குழு­வி­ன­ருக்­காக அந்த தனி­யார் இரவு விருந்து நிகழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தார்,” என்று அந்த இணை­யப்­பக்­கம் குறிப்­பிட்­டுள்­ளது.

பொஃப்மா அலு­வ­ல­கம், பொய்த் தக­வ­லைத் திருத்த திரு லிம்­முக்கு உத்­த­ர­விட்­டி­ருப்­பது இது மூன்­றா­வது முறை. கடந்த டிசம்­ப­ரில் அவர் வெளி­யிட்­டி­ருந்த வேறொரு பதி­வில் இடம்­பெற்­றி­ருந்த பொய்த் தக­வ­லைத் திருத்த அவ­ருக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டி­ருந்­தது. கல்­வி­யில், சிங்­கப்­பூர் மாண­வர்­க­ளை­விட வெளி­நாட்டு மாண­வர்­களுக்காக அர­சாங்­கம் அதிக செலவு செய்­வ­தாக திரு லிம்­மின் பதிவு குறிப்­பிட்­டி­ருந்­தது.

ஜன­வ­ரி­யில் வேறொரு விவ­கா­ரம் தொடர்­பில், திருத்­தக் குறிப்பு ஒன்றை வெளி­யிட அவ­ருக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டி­ருந்­தது. சீனா­வுக்­குச் செல்­லாத ஐந்து சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­பட்­ட­தாக ‘ஏபி-டிசி சிட்டி நியூஸ்’ எனும் இணை­யப்­பக்­கம் வெளி­யிட்­டி­ருந்த கட்­டுரை ஒன்றை திரு லிம் பகிர்ந்து இருந்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!