சுடச் சுடச் செய்திகள்

‘கண்ணியமான முறையில் பிரசாரம் செய்ய விரும்புகிறேன்’

பிரசாரக் காலத்தின் தொடக்க நாட்களிலேயே புக்கிட் பாத்தோக் தனித்தொகுதிக்கான தேர்தல் களத்தில் இரு வேட்பாளர்களும் வாய்ச் சண்டையில் இறங்கிவிட்டனர்.

புக்கிட் பாத்தோக் தனித்தொகுதிக்குப் போட்டியிடும் மசெகவின் வேட்பாளர் திரு முரளி பிள்ளை, தம்மை எதிர்த்துப் போட்டியிடும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சீ சூன் ஜுவனின் குற்றச்சாட்டுகளுக்கும் தம் மகன் தொடர்பில் இணையத்தில் வெளிவந்த செய்திகளுக்கும் பதிலளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 

புக்கிட் பாத்தோக் தனித்தொகுதியில் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே திரு முரளியின் மகன் குறித்த இணையப் பதிவு ஒன்று வெளியானது. தம் குடும்பத்தார் மீது நடத்தப்பட்ட ஒரு தவறான தாக்குதல் அது என்று திரு முரளி கூறினார். 

இருப்பினும் தாம் கண்ணியமான முறையில் பிரசாரம் நடத்த விரும்புவதாகவும் இனி அடுத்த கட்டத்திற்குச் சென்று குடியிருப்பாளர்களிடம் தம் கட்சி அறிக்கையையும் தம் பிரசாரத்தையும் கொண்டு சேர்ப்பதில் கவனம் செலுத்த விரும்புவதாகவும் புக்கிட் பாத்தோக் வட்டாரத்தில் நேற்று (ஜூலை 1) தொகுதி உலா வந்த 52 வயது திரு முரளி கூறினார்.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon