பட்ஜெட் 2020: கடல் நீர்மட்டம் உயர்கிறது, சிங்கப்பூரைக் காக்க புதிய நிதியில் $5 பில்லியன்

கடல் நீர்மட்டம் உயர்வதால் சிங்கப்பூருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்த்துக்கொண்டு சிங்கப்பூரைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் புதிய நிதி ஒன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

கடலோர மற்றும் வெள்ளப் பாதுகாப்பு நிதி (Coastal and Flood Protection Fund) என்ற அந்த நிதியில் தொடக்கமாக $5 பில்லியன் ஒதுக்கப்படும். தொடர்ந்து அந்த நிதியில் அதிகத் தொகை சேர்க்கப்படும் என்று  நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் தெரிவித்தார். 

பருவநிலை மாற்றம் காரணமாக கடல் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அதனால் சிங்கப்பூருக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும்.

அந்தப் பாதிப்பில் இருந்து சிங்கப்பூரைக் காக்க அடுத்த 100 ஆண்டு காலத்தில் $100 பில்லியன் அல்லது அதற்கும் அதிகத் தொகை தேவைப்படும் என்று பிரதமர் லீ சியன் லூங் தனது தேசிய நாள் பேரணி உரையில் தெரிவித்து இருந்ததை துணைப் பிரதமரான திரு ஹெங் வரவுசெலவுத் திட்ட உரையில் சுட்டினார்.

வரவுசெலவுத் திட்டத்தின் மேலும் விரிவான செய்திகளுக்கு நாளைய (பிப்ரவரி 19) தமிழ்முரசின் அச்சுப் பிரதியை நாடுங்கள்!

#தமிழ்முரசு #Coastal and Flood Protection Fund #Budget