சிப்பிகள் போர்ட் டிக்சனிலிருந்து இறக்குமதி செய்யப்படாததை சிங்கப்பூர் உறுதிசெய்யும்: எஸ்எஃப்ஏ

மலேசியாவின் போர்ட் டிக்சனுக்கு அருகில் உள்ள நீர்ப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட சிப்பிகளின் விநியோகத்தையும் விற்பனையையும் சிங்கப்பூர் கட்டுப்படுத்துகிறது.

போர்ட் டிக்சன் பகுதியில் கிடைக்கும் அந்தச் சிப்பிகளில் நச்சுக் கிருமிகள் உள்ளன என்பதையும், அவை உட்கொள்வதற்குப் பாதுகாப்பானவை அல்ல என்பதையும் மலேசிய மீன்பிடித் துறை உறுதிசெய்ததாக சிங்கப்பூர் உணவு அமைப்பு (எஸ்எஃப்ஏ) கூறியது.

ஏப்ரல் 2ஆம் தேதி எட்டு பேர் சிப்பிகளை உண்டு நோய்வாய்ப்பட்டதாக நம்பப்பட்ட சம்பவங்கள் குறித்து போர்ட் டிக்சனில் புகார் செய்யப்பட்டன.

பாதிக்கப்பட்டவர்களுக்குத் தலைவலி, கைகளிலும் கால்களிலும் உணர்வின்மை, தசை வலுவிழப்பு போன்றவை ஏற்பட்டன.

இந்நிலையில், இறக்குமதியாளர்கள் எங்கிருந்து சிப்பிகளைக் கொண்டுவருகிறார்கள் என்பதை உறுதிசெய்ய, சிங்கப்பூர் உணவு அமைப்பு அவர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

சிப்பிகள் சீனா, மலேசியா, ஜப்பான், வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

சிங்கப்பூர் உணவு அமைப்பு தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து, விவசாயப் பகுதிகளில் தண்ணீரின் தரத்தைச் சோதிக்கும்.

அதோடு சிப்பிகள் போர்ட் டிக்சனிலிருந்து இறக்குமதி செய்யப்படாததை உறுதிசெய்ய, இறக்குமதியாளர்களுடன் அது இணைந்து பணியாற்றும்.

இதற்கிடையே, போர்ட் டிக்சன் பகுதியில் உள்ள அந்தச் சிப்பிகளில் பல்வேறு வகையான பாசிகளில் உள்ள நச்சுக் கிருமி கண்டுபிடிக்கப்பட்டதாக மலேசிய மீன்பிடித் துறை நிர்வாகப் பிரிவின் துணைத் தலைமை இயக்குநர் வான் அஸ்னான் கூறினார்.

பாசிகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்புக்கு, அண்மைய வெப்ப வானிலை காரணம் என்று முதற்கட்ட விசாரணைகள் காட்டுவதாக அவர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!