கார் விரட்டல், விபத்து; சந்தேகப்பேர்வழி சிக்கினார்

போதைப்பொருள் கடத்தியவர் என்று சந்தேகிக்கப்படும் 27 வயது ஆடவர் ஒருவர், போலிசிடமிருந்து காரில் தப்பிச் செல்ல முயன்றார். அவரை அதிகாரிகள் விரட்டினர். பரபரப்பான இந்தச் சம்பவத்தின் முடிவில் அவர் கைதானார். அந்தச் சந்தேகப்பேர்வழி தப்பிச் செல்ல முயன்றதன் காரணமாக நான்கு கார்கள் விபத்துக்குள்ளா கின. மத்திய போதைப்பொருள் ஒழிப்பு இலாகா அதிகாரி ஒருவர் காயம் அடைந்தார். அந்த 39 வயது பெண் அதிகாரி கூ டெக் குவாட் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். இந்தச் சம்பவம் யீசூன் அவென்யூ 2ஐ நோக்கிச் செல்லும் லெண்டோர் அவென்யூவில் நள் ளிரவு சுமார் 12.30 மணிக்கு நிகழ்ந் ததாக வான் பாவ் நாளிதழ் தெரிவித்தது. சந்தேகப்பேர்வழியின் கார், ஒரு வாடகை நிறுவனத்தின் கார், ஒரு போலிஸ் வாகனம், போதைப்பொருள் ஒழிப்பு இலா காவைச் சேர்ந்த ஒரு வாகனம் ஆகியவை விபத்தில் சிக்கின. போக்குவரத்து போலிஸ் எடுத்த கூட்டு நடவடிக்கையின் போது அந்தச் சந்தேகப்பேர்வழி அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க முயன்றதாக போலிசும் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!