சாங்கி விமான நிலையம் அருகே தீப்பற்றி எரிந்த கார்

சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் சென்ற வெள்ளி நிற ஹோண்டா கார் ஒன்று சாலையைப் பிரிக்கும் தடுப்பில் மோதியதில் தீப்பற்றி எரிந்தது. நேற்று மாலை நடந்த இந்தச் சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை. விமானநிலைய முனையம் 2ஐ நோக்கிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதாக நேற்று மாலை 4 மணி அளவில் தொலை பேசி அழைப்பு வந்ததாக போலிசும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன. காரை ஓட்டிச் சென்ற 30 வயது சீன ஆடவரும் காரில் பயணம் செய்த 40 முதல் 52 வயது வரையிலிருக்கும் நால் வரும் சாங்கி பொது மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப் பட்டனர். அவர்கள் நினைவுடன் இருந்தனர். ஐவரும் மருத்துவ உதவி பெற்ற பின்னரே கார் தீப்பற்றியதாக அறியப்படுகிறது. தீயினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சம்பவம் குறித்து போலிஸ் விசாரணை தொடர்கிறது. தீக்கான காரணமும் விசாரிக்கப் படுகிறது.

சாங்கி விமான நிலையம் அருகே தீப்பிடித்து எரியும் ஹோண்டா கார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்