லிட்டில் இந்தியா கத்திக்குத்து; ஆடவருக்கு 10 ஆண்டு சிறை, பிரம்படி

லிட்டில் இந்தியாவில் அப்பாவி யான வழிப்போக்கர் ஒருவரை, 20 ஆண்டுகளுக்கு முன் உயிர் போகும்படி கத்தியால் குத்திய முன்னாள் குண்டர் கும்பல் ஆடவர் ஒருவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. 12 பிரம்படி கள் கொடுக்கும்படியும் உத்தர விடப்பட்டது. டிக்சன் ரோட்டில் இருக்கும் கார்பேட்டை ஒன்றுக்கு அருகே பி மகாலிங்கம் பட்டு தேவர், 42, என்பவரை 1998 ஆகஸ்ட் 21ஆம் தேதி அதிகாலை நேரத்தில் மீண்டும் மீண்டும் ஆயுதத்தால் குத்தி மரணத்தை விளை வித்ததாகக் கூறும் ஒரு குற்றச் சாட்டின் பேரில், கோபி கண்ணன் பாலகிருஷ்ணன், 43 என்பவர் திங்கட்கிழமை குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

மகாலிங்கம் பட்டு தேவரை போட்டி குண்டர் கும்பலைச் சேர்ந்த ஒருவர் என்று தவறுத லாக நினைத்து அவரை கோபி கண்ணன் தாக்கிவிட்டார். கோபிகண்ணனுக்கு அப் போது வயது 24. மலேசியாவி லிருந்து இங்கு திருப்பி அனுப்பப் பட்டதையடுத்து கோபிகண்ணன் 2016 மார்ச் 17ஆம் தேதிதான் கைதானார். தாக்குதல் சம்பவம் நிகழ்ந்த தற்கு முதல்நாள் இரவு, கோபி கண்ணனும் இதர குண்டர் கும்பல் பேர்வழிகள் ஐந்து பேரும் மெட்ராஸ் ஸ்திரீட்டில் இருக்கும் மதுபான கடை ஒன்றில் சந்தித்து போட்டி குண்டர் கும்பல் ஒன் றைப் பழிவாங்க தயாராயினர்.

அந்த எதிரி கும்பல் பக்கத் தில் இருப்பதாக நள்ளிரவில் செய்தி வந்ததையடுத்து, நண்பரி டமிருந்து கத்தி ஒன்றை வாங் கிக்கொண்ட கோபிகண்ணன், அதை தன் உடையில் மறைத்து வைத்துக்கொண்டார். பிறகு அவர்கள் அந்த மது பான கடையைவிட்டு வெளியே சென்றனர். அப்போது தங்களைக் கடந்துசென்ற சிலரை அவர்கள் விரட்டினர். போட்டிக் கும்பலை விரட்டிக்கொண்டு ஓடுவதற்குப் பதிலாக, அந்தக் கும்பலை ஒரு லாரியில் ஏறிச் சென்று விரட்ட கோபிகண்ணன் கும்பல் முடிவு செய்தது.

லாரியை ஒருவர் ஓட்ட, கோபிகண்ணனும் மற்றவர்களும் மரக்கம்புகளை ஆயுதமாக வைத் துக்கொண்டார்கள். டிக்சன் ரோட்டுக்கு அருகே டன்லப் ஸ்திரீட்டில் லாரியை விட்டு அந்தக் கும்பல் தரையில் இறங்கியது. போட்டி கும்பல் ஆட்களை அவர்கள் கழியால் தாக்கினார்கள். அந்தக் கலவரத் தின்போது, பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த மகாலிங்கம் திடீ ரென்று எழுந்து பயந்து ஓடத் தொடங்கினார். அவரை எதிரி என்று நினைத்துவிட்ட கோபிகண்ணன், அவரை விரட்டி பிடித்துவிட்டார். மகாலிங்கம் எப்படியோ சமா ளித்து கோபிகண்ணன் கையி லிருந்த கழியைக் கீழே தட்டிவிட் டார். கழி கைதவறிபோனதை அடுத்து கோபிகண்ணன் தன் னிடம் இருந்த கத்தியை எடுத்து மகாலிங்கத்தை முதுகில் குத்தி னார். மகாலிங்கம் தப்பி ஓடினார். விடாமல் விரட்டி பிடித்த கோபிகண்ணன் மகாலிங்கத்தின் முதுகில் திரும்பத்திரும்ப குத்தினார். பிறகு ரத்தம் சொட்ட சொட்ட மகாலிங்கம் கீழே விழுந்துவிட்டார். கோபிகண்ண னும் அவருடைய ஆட்களும் அந்த இடத்தை விட்டுச் சென்று விட்டார்கள்.

இந்தச் சம்பவத்தில் பயன் படுத்தப்பட்ட கத்தி மீட்கப்படவே இல்லை. இந்தச் சம்பவத்தை அடுத்து ஒருவர் கைதானார். கோபிகண்ணன் ஒரு சில நாட்களுக்குப் பிறகு வேறொரு வரின் பாஸ்போர்ட்டை பயன் படுத்தி மலேசியாவுக்கு ஓடிவிட் டார். இந்த விவரங்கள் விசா ரணையில் தெரிவிக்கப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!