ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தில் கோலாகல குடமுழுக்கு; பக்தர்கள் பரவசம்

ப. பாலசுப்பிரமணியம்,

எஸ். வெங்கடேஷ்வரன்

வாட்டர்லூ ஸ்திரீட்டில் அமைந் துள்ள ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தில் 'ஜெய் ஸ்ரீமன் நாராயணா' என பக்தர்கள் பக்தி பரவசத்தில் முழக்கமிட, நேற்று காலை 9.15 மணி அளவில் அவ்வாலய குடமுழுக்கு விழா சீரும் சிறப்புமாக நடந்தேறியது. சுமார் 148 ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ்வாலயத்தின் குட ழுக்கு விழாவில் கிட்டத்தட்ட 10,000 பக்தர்கள் கலந்துகொண் டனர். அதனை வழிநடத்த 700 தொண்டூழியர்கள் முன்வந்தனர். ஆனக்ஸ் (Onyx) கற்களைக் கொண்ட சன்னிதிகள், ஆலயத் தூண்களில் அழகுமிகு சிற்பங் களைச் சேர்த்தல், உள்மேற் கூரையில் இந்தியாவில் செதுக் கப்பட்ட ஓவியங்களைப் பதித்தல் என சுமார் $4 மில்லியன் செலவில் ஆலயம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கு ஏற்பாடுகள் சற்று சவாலாக விளங்கினாலும் இதர அரசாங்க அமைப்புகளின் ஒத் துழைப்புடன் விழா சுமுகமாக நடைபெற்றது என்று தெரிவித்தார் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தின் அறங்காவலர் ப. சிவராமன்.

இது போன்ற குடமுழுக்கு நிகழ்வில் இரண்டாம் முறையாக உணவு பரிமாறி தொண்டூழியம் புரிகிறார் 24 வயது குமாரி தாட்சாயிணி குமார். "சேவை புரிந்ததற்காக பிறர் வாழ்த்தும்போது, அது மனதளவில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது, தொடர்ந்து சேவையாற்றுவதற்கு ஊக்குவிக்கிறது," என்று கூறினார் சமீபத்தில் வர்த்தக துறையில் பட்டயக் கல்வியை முடித்துள்ள குமாரி தாட்சாயிணி.

படங்கள்: த. கவி, ஜோ நாயர்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!