பையோனிக்ஸ் வாகனம் பின்நோக்கிச் செல்வதை நிறுத்தவில்லை

முழு நேர தேசிய சேவையாளாரான லியு காயின் மரணத்திற்க்குக் காரணமான ‘பையோனிக்ஸ்’ என்ற இராணுவ வாகனம், பல ஆணைகளுக்குப் பிறகும்  பின்நோக்கி பயணம் செல்வதை நிறுத்தவில்லை என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென். 

விபத்து நிகழ்ந்த தருணத்தில் ‘லென் ரொவர்’ என்ற வாகனத்தில் திரு லியு இருந்தார். இந்த வாகனம் மீது ஏறிய பின்னரே அந்த ‘பையோனிக்ஸ்’ வாகனம் நின்றது. இந்தச் சம்பவம் கிட்டத்தட்ட 8 வினாடிகளுக்கு நீடித்தது என்றார் அமைச்சர் இங்.   

தொடர்ந்து பேசிய அமைச்சர் சுயேச்சை விசாரணைக் குழு மற்றும் காவல் துறையினர் ‘பையோனிக்ஸ்’ வாகனத்தில் இருந்த நபர்களின் தொடர்பு சாதனங்கள் சரியாக வேலை செய்ததா என்பதை உறுதிப்படுத்த ஆராய்ந்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.  

பாதுகாப்பை அதிகரிக்க பல தீர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதத்திலிருந்து பின்புறம் தெரியும் புகைப்படக் கருவிகள் ‘பையோனிக்ஸ்’ வாகனங்களில் பொருத்தப்படுவது அத்தீர்வுகளில் ஒன்று. இந்தத் திட்டம் இவ்வாண்டு படிப்படியாக அறிமுகப்படுத்தபடும்.  

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நேற்று நடைபெற்ற தேசின தின அணிவகுப்பின் கூட்டு ஒத்திகை யின்போது, தேசிய தின அணிவகுப்பு 2019 அணிவகுப்பு மற்றும் சடங்குபூர்வ அங்கங்கள் துணைக் குழுத் தலைவர் மூத்த லெஃப்டினண்ட் கர்னல் லோ வூன் லியாங் (நடுவில்), அணிவகுப்புத் தளபதி லெஃப்டினண்ட் கர்னல் எல்வின் சூ, அணிவகுப்பு ரெஜிமெண்டல் சார்ஜண்ட் மேஜர் மாஸ்டர் வாரண்ட் அதிகாரி சோங் வீ கியோங் ஆகியோருடன் அணிவகுப்பு பங்கேற்பாளர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

16 Jun 2019

அணிவகுப்பில் பங்கேற்கும் தொண்டூழியர் அணி