மலாயா பல்கலைக்கழகத்துடன் சிங்ஹெல்த் ஒப்பந்தம்

இளைய தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கவும் நோயாளிகளின் பராமரிப்பை மேம்படுத்தவும் நோக்க மாகக் கொண்ட இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் சிங்ஹெல்த் பல துறை மருந்தகங்கள் நேற்று கையெழுத்திட்டது. 
மலாயா பல்கலைக்கழகத்துட னும் புத்ரா மலேசியா பல்கலைக் கழகத்துடனும் இந்த ஒப்பந்தங்கள் நேற்று ஏற்படுத்தப்பட்டன.
இந்த அமைப்புகள் நிபுணத்து வத்தையும் வளங்களையும் பகிர்ந்து கொள்ள புதிய ஒப்பந்தங்கள் வழி வகுக்கின்றன. 
மாணவர்களாலும் சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்களாலும் உரு வாக்கப்பட்ட அடிப்படைப் பராமரிப்பு மருத்துவ தொழில்நுட்பத் தீர்வுகள் FAMARI தொடக்க நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்படும்.