நிதி திரட்ட ‘கிரைசிஸ் சென்டரு’க்குத் தற்காலிக தடை

சமூக சேவை நிலையமான கிரைசிஸ் சென்டர் (சிங்கப்பூர்) அடுத்த மூன்று மாதங்களுக்கு எவ்வித நன்கொடை திரட்டையும் நடத்தக்கூடாது என்று இன்று முதல் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

வீடில்லாத ஆடவர்களுக்கும் வீடில்லாத அபாயத்துக்குள்ளாகும் ஆடவர்களுக்கும் தற்காலிக புகலிடம் அளிக்கும் அமைப்பாக கிரைசிஸ் சென்டர் செயல்படுகிறது. 

அந்த நிலையம் இதுவரை நடத்திய நன்கொடை திரட்டுகளில் மோசடிகள் நடந்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் இப்போது விசாரணை நடைபெறுகிறது. 

இதன் தொடர்பில் இந்நிலையத்துக்குக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முதல் முறையாக தடை விதிக்கப்பட்டது. இம்முறை அறிவிக்கப்பட்ட தடை கடந்த ஆண்டு தடையின் நீட்டிப்பாகும் என்று அறநிறுவன ஆணையர் ஆங் ஹாக் செங் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார். 

கிரைசிஸ் சென்டர் நிலையம் அதன் வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் ஆனால் நன்கொடை திரட்டுதலில் மட்டும் ஈடுபடக்கூடாது என்றும் அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon