பல குடியிருப்பு வட்டாரங்களில் அஞ்சல்பெட்டிகள் சேதம்

அஞ்­சல்­பெட்­டி­களை உடைத்து அவற்­றில் இருந்த பற்­றுச்­சீட்­டு­களைத் திரு­டி­ய­தன் சந்­தே­கத்­தில் 37 வயது மாது ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

சென்ற ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று வர­வு­செ­ல­வுத் திட்­டம் 2020க்கான மளி­கைப்­பொ­ருள் பற்­றுச்­சீட்­டு­கள், தோ பாயோ லோரோங் 7ல் உள்ள குடி­யி­ருப்­பா­ளர் புளோக் அஞ்­சல்­பெட்­டி­க­ளி­லி­ருந்து திரு­டப்­பட்­ட­தாக சிங்­கப்­பூர் போலிஸ் படை தெரி­வித்­தது. விசா­ர­ணை­யு­டன் போலிஸ் கேம­ராக்­களில் பதி­வான படங்­களை­யும் கொண்டு குற்­றம் புரிந்­த­தாக நம்­பப்­படும் மாதை அதே நாளன்று போலி­சார் பிடித்­த­னர்.

தனக்­குச் சொந்­தம் அல்­லாத அஞ்­சல்­பெட்­டி­க­ளி­லி­ருந்து பற்­றுச்­சீட்­டு­களை மாது திருடி இருப்­ப­தாக ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணை­கள் கூறு­கின்­றன என்று போலி­சார் நேற்று முன்­தி­னம் வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பிட்­ட­னர்.

இதே போன்ற சம்­ப­வங்­கள் வேறு வட்­டா­ரங்­க­ளி­லும் நடந்­துள்ள நிலை­யில், தங்­க­ளின் பற்­றுச்­சீட்டு­களைச் சீக்­கி­ர­மா­கப் பெற்­றுக்­கொள்­ளு­மாறு பொது­மக்­க­ளுக்கு போலி­சார் அறி­வு­றுத்­தி­யுள்­ள­னர்.

லெங்கோக் பாரு, ரெட்­ஹில் ரோடு, ரெட்­ஹில் குளோஸ் ஆகிய வட்­டா­ரங்­க­ளின் 9 புளோக்­கு­களில் அமைந்­துள்ள அஞ்­சல்­பெட்­டி­களும் இதே போன்று வலுக்­கட்­டா­ய­மா­கத் திறக்­கப்­பட்­ட­தாக சிங்­போஸ்ட் நிறு­வ­னம் தனி அறிக்கை ஒன்­றில் குறிப்­பிட்­டது.

தக­வல் அறிந்­த­தும் உடனே அவ­சர செயல்­பாட்­டுக் குழு ஒன்று சம்­பவ இடங்­க­ளுக்கு அனுப்­பப்­பட்­ட­தா­க­வும் சில அஞ்­சல்­பெட்­டி­களின் கதவு திறந்­த­படி இருந்­த­தா­க­வும் நிறு­வ­னத்­தைச் சேர்ந்த அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார்.

ஒன்­பது புளோக்­கு­க­ளுக்­கு­மான அஞ்­சல்­கா­ரர் வட்­டா­ரத்தை விட்­டுச் சென்ற பிறகு, நாச வேலை­களும் திருட்­டும் நடந்­தி­ருப்­ப­தா­கத் தெரி­கிறது என்று அவர் கூறி­னார்.

இதை­ய­டுத்து, தங்­க­ளின் பற்­றுச்­சீட்­டு­கள் திரு­டப்­பட்­டுள்­ள­தா­கச் சந்­தே­கிப்­போர், உடனே புகார் அளிக்­கு­மாறு போலி­சார் கேட்­டுக்­கொண்­டுள்­ள­னர். அத்­து­டன் பற்­றுச்­சீட்­டுக்­கான தொலை­பேசி எண்­ணில் தொடர்­பு­கொண்டு தங்­க­ளுக்­குச் சேர­வேண்­டிய பற்­றுச்­சீட்­டு­களைச் செல்­லு­படி அற்­ற­தாக்­கும்படி தெரி­வித்­துப் புதிய பற்­றுச்­சீட்­டு­கள் அனுப்­பக் கோரு­மா­றும் அவர்­கள் ஆலோ­சனை வழங்­கி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!