வரலாற்றுச் சிறப்புகளைக் கூறும் ஹவ்காங் மரபுடைமைப் பாதை

அக்­கம்­பக்க வட்­டா­ர­மான ஹவ்­காங்­கின் வர­லாற்­றுச் சிறப்­பு­க­ளை­யும் வளர்ச்­சிப் பாதை­யை­யும் அந்தப்­ ப­குதி மக்­க­ளின் வாழ்க்­கை­யை­யும் எடுத்­துக்­கூ­றும் விதத்­தில் புதிய மர­பு­டை­மைப் பாதை அமைக்­கப்­பட்டுள்­ளது.

இந்த ஹவ்­காங் மர­பு­டை­மைப் பாதை­யில், கன்னி மரி­யாள் நேடி­விட்டி தேவா­ல­யம், ஹவ்காங் டூ மு குங் கோயில் ஆகிய இரு தேசிய நினை­வுச் சின்­னங்­க­ளு­டன் ஹாஜி யூசோஃப் பள்­ளி­வா­சல், செயின்ட் பால் தேவா­ல­யம், யுன் காய் ஜி கொங் கோயில் உள்­ளிட்ட வழி­பாட்­டுத் தலங்­களும் இடம்­பெற்­று உள்­ளன.

சம­யப் பரப்­பா­ளர் பணி­க­ளுக்­காக 1800களில் சீனா­வி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்த கத்­தோ­லிக்க தியோச்சு குடி­யே­றி­கள் இங்கு வந்­த­தைத் தொடர்ந்து அப்­ப­கு­தி­யில் வழி­பாட்­டுத் தலங்­கள் அமைக்­கப்­பட்­டன.

ஹவ்காங் மரபுடைமைப் பாதையில் இடம்பெற்றுள்ள கன்னி மரியாள் நேட்டிவிட்டி தேவாலயம் அவற்றில் ஒன்று. அது கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் பழமையானது.

அப்­பர் சிராங்­கூன் சாலை­யில் 3.5 கிலோ மீட்­டர் தூரத்­தில் அமைந்­துள்ள இந்த மர­பு­டைப் பாதை­யில், வழி­பாட்டு இடங்­கள், பழைய வர்த்­த­கங்­கள் உள்­ளிட்ட எட்டு முக்­கி­யத்­து­வம் பெற்ற இடங்­கள் உள்­ளன.

பார்ட்லி சாலை­யில் அமைந்­துள்ள ஸ்ரீ ரா­ம­கி­ருஷ்ணா மட­மும் அவற்றில் ஒன்று. 1943ல் ராம­கிருஷ்ணா சிறு­வர் இல்­ல­மாக தொடங்கப்­பட்ட இந்த இடத்­தில் வளர்ந்து, சமூ­கத்­தில் உயர்ந்த நிலைக்கு வந்­த­வர்­கள் பலர்.

இரண்­டாம் உல­கப் போரி­னால் பாதிக்­கப்­பட்ட சிறார்­க­ளுக்கு அடைக்­கலம் அளித்த இந்த இல்­லத்­தில் இன்­றும் வச­தி­கு­றைந்த, பரா­ம­ரிப்­புத் தேவைப்­படும் சிறார்­கள் தங்­கி­யுள்­ள­னர்.

தேசிய மர­பு­டை­மைக் கழ­கத்­தின் 20வது மர­பு­டை­மைப் பாதை­யான இது­தான், ஆக அதி­க­ள­வில் சமூ­கப் பங்­க­ளிப்­பைக் கொண்­டுள்­ளது என்று கழ­கம் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

இந்த வட்­டா­ரத்­தைப் பற்றி நன்கு அறிந்த 28 பேர் நேர்­கா­ணல்­கள், புகைப்­ப­டங்­கள் வழி­யாக இந்த வர­லாற்­றுப் பதி­வுக்­குப் பங்­க­ளித்­துள்­ள­னர்.

“வர­லாற்­றுக் குறிப்­பு­க­ளை­விட, இது­போன்ற அங்கு வாழ்ந்த மக்­க­ளின் பங்­க­ளிப்­பு­கள் இந்த மர­பு­டை­மைப் பாதையை பார்­வை­யா­ளர்­க­ளுக்கு சுவா­ரஸ்­ய­மா­ன­தாக்­கு­கின்­றன,” என்­றார் கழ­கத்­தின் கொள்கை, சமூ­கப் பிரி­வுக்­கான துணைத் தலைமை நிர்­வாகி அல்­வின் டான்.

கடந்த 1979ஆம் ஆண்­டில் குடி­யி­ருப்பு வட்­டா­ர­மாக வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்­தால் அறி­விக்­கப்­பட்ட ஹவ்­காங் நக­ரத்­தின் பெயர் ‘அவ் காங்’ என்ற தியோச்சு (சீன கிளை­மொழி) சொல்­லி­லி­ருந்து உரு­வா­னது.

அப்­பர் சிராங்­கூன் சாலைக்கு இணை­யாக இன்­னும் ஓடும் சிராங்­கூன் ஆற்­றைக் குறிக்­கும் சொல் அது.

ஹவ்­காங் மர­பு­டை­மைப் பாதை­யின் வரை­ப­டம், வழி­காட்­டிக் குறிப்­பு­கள் தமிழ், ஆங்­கி­லம், சீனம், மலாய் ஆகிய நான்கு தேசிய மொழி­க­ளி­லும் இடம்­பெற்­றுள்­ளன. தேசிய மர­பு­டைமைக் கழ­கத்­தின் Roots.sg என்ற இணை­யத்­த­ளத்­தில் காண­லாம்.

அச்­சுப் பிர­தி­களை மர­பு­டை­மைக் கழக அரும்­பொ­ரு­ள­கங்­கள், அல்­ஜுனிட்-ஹவ்­காங் நகர மன்­றம், ஹவ்­காங், பொங்­கோல், பாய லே­பார், கோவன், யூனோஸ் ஆகிய சமூக மன்­றங்­க­ளி­லும் அல்­ஜுனிட், காக்கி புக்­கிட் சமூக நிலை­யங்­களி­லும் பெற­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!