தீமிதி: பக்தர்களுக்கு கைகொடுத்த இணையம்

தீமி­தித் திரு­வி­ழாவை இந்த ஆண்டு கோயி­லுக்­குச் சென்று காண முடி­ய­வில்லை என்ற ஏமாற்­றம் இருந்­தா­லும் விழாவை நேர­டி­யாக இணை­யத்­தில் காண முடிந்­த­தில் பல பக்­தர்­க­ளுக்கு மகிழ்ச்சி.

இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் இந்த ஏற்­பாட்­டைப் பக்­தர்­கள் வர­வேற்­ற­னர். யூடியூப், ஃபேஸ்புக் தளங்களில் ஒளிபரப்பான நேரலைக் காணொளி களைக் கிட்டத்தட்ட 55,000க்கும் மேற்பட்ட மக்கள் கண்டனர்.

தலை­மைப் பண்­டா­ரம் பூக்­குழியை 4.46 மணிக்­குக் கடந்­தார். 60 பக்­தர்­கள் பாது­காப்பு இடை­வெளி­யைக் கடைப்­பி­டித்து தீமித்­த­னர். 5 மணி அள­வில் அதை அவர்­கள் நிறை­வேற்றி முடித்­த­னர்.

தீமி­தித் திரு­வி­ழா­வில் கடந்த 20 ஆண்­டு­க­ளாக பங்­கேற்று வரும் திரு­மதி பூ. கார்த்­தி­கா­யினி,32, பக்­தர்­கள் மன­த­ள­வில் அம்­மனை தரி­சிப்­பதே முக்­கி­யம் என்­றும் தீமிதி தடை­ப­டா­மல் தொடர்ந்து நடந்­து­வரு­வது மகிழ்ச்சி தரு­கிறது என்­றும் கூறி­னார்.

“இது போல மறு­ப­டி­யும் பக்­தர்­களுக்கு ஒரு சூழ்­நிலை ஏற்­ப­டக்­கூ­டாது. அம்­மனை அம்மா போல பார்க்­கி­றேன். ஓர் அன்னை அவ­ரின் பிள்­ளை­கள் இல்­லா­மல் பிறந்­த­நா­ளைக் கொண்­டா­டு­வது எப்­படி இருக்­குமோ அதுபோலவே இவ்­வாண்­டின் தீமி­தி­யும் அமை­கிறது. ஆனால் உடலள­வில் நேர­டி­யாகச் சென்­று­தான் வழிபட முடி­யும் என்­பது இல்லை.

“இறை­வன் தூணி­லும் இருப்­பார் துரும்­பி­லும் இருப்­பார் என்­பதற்கு ஏற்ப, வீட்­டி­லேயே நம்­மால் முடிந்த சிறு வழி­பாடு செய்­தும்­கூட வழி­ப­ட­லாம். மன­த­ள­வில் நமக்கு இருக்­கும் பக்­தியே முக்­கி­யம்,” என்­றார் கார்த்­தி­கா­யினி.

‘துர்க்­கையம்­மன் பிள்­ளை­கள்’ என்ற சம­யத் தொண்­டூ­ழிய அமைப்­பைச் சேர்ந்த கார்த்­தி­கா­யினி, அந்த அமைப்­பின் ‘வாட்ஸ்­அப்’ குழு­விலும் உள்­ளார்.

கடந்த ஆண்­டு­க­ளின் தீமி­திப் படங்­கள், காணொ­ளி­கள், இவ்­வாண்­டின் நேரலை இணைப்­பு­கள்­ அ­தில் பகி­ரப்­பட்டு வரு­கின்­றன. திரு வேணு ஆர்‌ஷ் என்ற பக்­தர் 12 ஆண்­டு­க­ளாக பூக்­கு­ழி­யைக் கடந்து வந்­துள்­ளார். கிரு­மிப்­ப­ர­வல் சூழ­லில் அதிகக் கூட்­டம் திரண்­டால் பாதிப்பு ஏற்­பட்­டு­வி­டும் என்று அவர் கூறி­னார்.

“இந்த ஆண்­டின் ஏற்­பா­டு­களை ஆத­ரிக்­கி­றேன். நேரலை மூலம் பார்த்து, வீட்­டில் குடும்­பத்­து­டன் சேர்ந்து சிறு வழிபாடு செய்து தீமிதித் திரு­வி­ழா­வு­டன் இணைந்­தி­ருக்­கி­றோம்,” என்­றார் திரு வேணு, 41.

“முடிந்­த­தைச் செய்­வது முக்­கி­யம் என்று நினைக்­கி­றேன். காலச்­சூ­ழ­லுக்கு ஏற்ப வழி­பா­டு­க­ளை­யும் மாற்­றி­ய­மைக்­க­வேண்­டும். வழக்­கம்­போல பூக்­கு­ழி­யில் இறங்க முடி­யாது என்ற ஏக்­கம் இருந்தது. ஆனால் அதை எண்ணி வருந்­த­வில்லை. சூழ்­நி­லைக்­குத் தகுந்த வழி­பா­டு­க­ளைச் செய்­வதே முக்­கி­யம்,” என்­றார் கடந்த 31 ஆண்டு­களாக தீமி­தித் திரு­வி­ழா­வில் பங்­கேற்றுவரும் சீன பக்­த­ரான திரு டேவிட் இங், 65.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!