அமைச்சர் சண்முகம்: நீதித்துறையின் நேர்மையைக் காப்பது முக்கியம்

சிங்­கப்­பூ­ரில் ஒரு வெளி­நாட்­டுப் பணிப்­பெண் மீது திருட்­டுக் குற்­றம் சாட்டி அவர் குற்­ற­வாளி என்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது. அவர் மீது புகார் கூறி­ய­வர் வசதி படைத்­த­வர், செல்­வாக்கு மிக்­க­வர். ஆனால், உயர் நீதி­மன்­றத்­தில் அந்­தப் பணிப்­பெண் மேல்­மு­றை­யீடு செய்ய, அவர் பின்­னர் விடு­விக்­கப்­பட்­டார்.

இது சிங்­கப்­பூ­ரில் சட்டத்தின் முன் அனை­வ­ரும் சமம் என்­பதை எடுத்­துக்­காட்­டு­வதாக உள்ளதென்று சட்ட, உள்­துறை அமைச்­சர் சண்­மு­கம் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

திரு லியூ மன் லியோங் என்­ப­வ­ரின் வீட்­டில் பணிப்­பெண்­ணாக இருந்த பார்தி லியானி தொடர்­பான வழக்கு குறித்து நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று பேசிய அமைச்­சர், இந்த வழக்கு தொடர்­பான நிகழ்­வு­களை விவ­ரித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் சட்ட பரி­பா­ல­னம் எவ்­வாறு இருக்­கிறது என்­ப­தற்கு இந்த வழக்கு ஓர் உதா­ர­ணம் என்று அமைச்சர் கூறி­னார்.

“நாம் நீதி­மன்­றத் தீர்ப்பை ஏற்றுக்­கொள்­ள­லாம், அல்­லது ஏற்றுக்­கொள்­ளா­மல் போக­லாம், அது பிரச்­சி­னை­யல்ல,” என்று கூறிய அமைச்­சர், இந்த வழக்கு சிங்­கப்­பூ­ரில் குற்­ற­வி­யல் நீதித்­துறை எவ்­வாறு செயல்­ப­டு­கிறது என்­பதை எடுத்­துக்­காட்­டு­வ­தாக உள்­ள­தா­கத் தெரி­வித்­தார்.

பார்தி லியானி வழக்கு தொடர்­பாக அமைச்­சர்­நிலை அறிக்­கையை திரு சண்­மு­கம் நேற்று வாசித்­தார்.

பல சமு­தா­யங்­களில் மேல்­மட்­டத்­தில் உள்­ள­வர்­கள் சட்­டத்தை தங்­கள் விருப்­பத்­துக்கு வளைக்­கின்­ற­னர் என்ற உணர்வு இருப்ப தாகக் கூறிய அமைச்­சர், சிங்­கப்பூ­ரில் அவ்­வாறு இல்லை என்­பதை ஆணித்­த­ர­மாக வலி­யு­றுத்­தி­னார்.

சிங்­கப்­பூ­ரில் பல்­லாண்டு கால­மாக போற்றி வளர்க்­கப்பட்ட நீதித்­து­றை­யின் நேர்மை கட்­டிக்­காக்­கப்­பட வேண்­டும் என்­றும் விளக்கினார்.

“திரு லியூ மன் லியோங் தமது செல்­வாக்­கைப் பயன்­ப­டுத்தி நட­வடிக்­கை­களை தமக்கு சாத­மாக்­கிக்ெகாண்­டார் என்­றால் அது நமது அடித்­த­ளத்தில் ஓர் அடி விழுந்­த­து­போல் ஆகி­வி­டும்.

“நியா­யம், அனை­வ­ருக்கும் நீதி போன்ற உயர் எண்­ணங்­க­ளால் உரு­வாக்­கப்­பட்ட நம் நாட்­டில் மாசு ஏற்பட்டதுபோல் ஆகி­வி­டும்,” என்று அவர் கூறி­னார்.

சிங்கப்­பூ­ரில் நீதித்­துறை பாழ்­படா­மல் இருப்­பதை நாம் கட்­டிக்­காக்­கும் அதே­வே­ளை­யில், ஊழலோ அதி­கா­ரத்­தைத் தவ­றா­கப் பயன்­படுத்­து­வதோ நிக­ழாது என்று அர்த்­த மா­கி­வி­டாது என்று கூறிய அைமச்­சர், அவ்­வாறு நடக்­கு­மா­னால் அதற்கு எதி­ராக துரி­த­மாக, தீர்க்­க­மான நட­வ­டிக்­கை­கள் எடுத்து அதற்­குப் பொறுப்­பா­னர்­களை தண்­டித்து அது­போன்ற குற்­றங்­களை துடைத்­தொ­ழிப்­ப­து­தான் நாம் செய்­ய­வேண்­டி­யது என்று கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரின் அரசு நேர்­மைையக் கட்­டிக்­காப்­ப­தில் தயவு தாட்­சண்­யம் காட்­டாது என்­ப­தற்கு அடை­யா­ள­மாக அவர் முன்­னாள் அமைச்­சர் தே சியாங் வான் ஊழல் புரிந்­த­தற்­காக கைது செய்­யப்­பட்­ட­தை­யும் குடி­மைத் தற்­காப்­புப் படைத் தலை­வர் பீட்­டர் லிம் ஊழல் குற்­றத்­துக்­காக ஆறு மாதம் சிறை சென்­றது, பதவி நீக்­கம் செய்­யப்­பட்­டதையும் அமைச்சர் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!