‘பணிப்பெண் விசாரணையில் குறைபாடு’

இந்­தோ­னீ­சி­யா­வைச் சேர்ந்த முன்னாள் பணிப்­பெண் பார்தி லியானி விசா­ர­ணை­யில் குறை­பாடு இருந்­த­தாக உள்­துறை, சட்ட அமைச்­சர் கா. சண்­மு­கம் ஒப்புக் கொண்டுள்ளார்.

போலி­சார் விரை­வா­கச் செயல்­பட்­டி­ருக்க வேண்­டும் என்று அவர் தெரி­வித்­தார்.

அந்­தப் பணிப்­பெண் வழக்­கில் தொடர்­பு­டைய லியூ மன் லியோங்­கும் அவ­ரு­டைய புதல்­வ­ரும் அளித்த புகா­ருக்­கும் சம்­பவ இடத்­திற்கு போலிஸ் அதி­கா­ரி­கள் சென்­ற­தற்­கும் ஐந்து வார இடை­வெளி இருந்­தது.

இது சட்­ட­பூர்­வ­மான தேவை நிபந்­த­னை­யை­யும் போலிஸ் நெறி­மு­றை­யை­யும் மீறிய ஒரு செய­லா­கும் என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

போலி­சில் 2016 அக்­டோ­பர் 30ஆம் தேதி புகார் தாக்­கல் செய்­யப்­பட்­டது. அத­னை­ய­டுத்து விரை­வாக சம்­பவ இடத்­திற்கு போலி­சார் சென்­றி­ருக்க வேண்­டும் என்­றார் அமைச்­சர்.

ஒரு குற்­றச்­செ­யல் நிக­ழும் இடத்திற்கு போலிஸ் அதி­கா­ரி­கள் குறித்த நேரம் தவ­றா­மல் அல்­லது கூடு­மானவரை­யில் விரை­வாக போக­வேண்­டும் என்­பது சட்­டத்­தின்­படி தேவை­யான ஒன்று என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

இந்த விவ­கா­ரத்­தைப் பொறுத்த வரை­ போலிஸ் அதி­கா­ரி­கள் லியூ­வின் வீட்­டிற்கு 2016 டிசம்­பர் 3ஆம் தேதி­தான் சென்­ற­னர்.

இந்­தக் குறை­பாட்­டிற்கு சாக்­கு­போக்கு எது­வும் கூற முடி­யாது என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

இந்த விவ­கா­ரத்­தில் சம்­பந்­தப்­பட்டு உள்ள அதி­கா­ரி­க­ளின் நடத்தை தொடர்­பில் துறை ரீதி­யான புலன்­வி­சா­ர­ணை­ நடந்து வரு­வ­தா­க­வும் தேவைப்­படும் பட்சத்­தில் நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­படும் என்­றும் திரு சண்­மு­கம் கூறினார்.

இந்­தக் குறை­பாட்­டுக்­குக் காரணம் என்ன என்­ப­தைத் தெரி­விக்­கும்­படி தான் கேட்­ட­தா­க­வும் புலன்­வி­சா­ரணை அதி­காரி, நேரம் இல்லாத அள­விற்கு இதர பல பணி­களில் ஈடு­பட்டு இருந்­த­தாக தன்­னி­டம் தெரி­விக்­கப்­பட்­ட­தா­க­வும் அமைச்­சர் கூறி­னார்.

போலிஸ் புலன்­வி­சா­ரணை அதி­கா­ரி­கள் பணிச்­சு­மையை மறு­ப­ரி­சீ­ல­னை செய்­யும்­படி தான் கேட்டுக் ­கொண்டு இருப்­ப­தா­கக் குறிப்­பிட்ட திரு சண்­மு­கம், இது மனி­த­வள பிரச்­சினை என்­ப­தால் இதற்கு எளிதில் தீர்வு இராது என்­பதை ஒப்­புக்­கொண்­டார்.

குமாரி பார்தி லியா­னியை விடு­விப்­பது என்று உயர்­நீ­தி­மன்­றம் முடிவு செய்­தது.

திருட்டு நிகழ்ந்த வீட்­டிற்கு போலிஸ் அதி­கா­ரி­கள் தாம­த­மா­கச் சென்­றது, உயர்­நீ­தி­மன்­றம் அவ்வாறு முடிவு எடுத்­த­தற்­கான கார­ணங்­களில் ஒன்­றாக இருந்­தது.

குற்­றச்­செ­யல் தொடர்­பான சம்பவங்­க­ளைப் பற்றி புலன்­வி­சா­ரணை நடத்­தும்­போது எப்­போ­துமே பொருட்களை போலிஸ் கைப்­பற்ற வேண்­டும் என்ற கட்­டா­யம் இல்லை என்­றும் அவர் விளக்­கி­னார்.

அப்­படி பொருட்­களை அதி­கா­ரி­கள் கைப்­பற்­ற­வில்லை என்­றா­லும் அவற்­றைப் புகைப்­ப­டம் எடுப்­பது போன்ற காரி­யங்­கள் மூலம் சாட்சி­யங்­க­ளுக்கு முறை­யான ஆதா­ரங்­க­ளைப் பெற­வேண்­டும்.

இந்­தப் பணிப்­பெண் விவ­கா­ரத்­தைப் பொறுத்தவரை போலிஸ் புகா­ரைத் தொடர்ந்து மிக­வும் கவ­ன­மாக எடுக்­கப்­பட்ட புகைப் ­ப­டங்­கள் போதிய இன்னும் சிறப்பாக இருந்­தி­ருக்­க­லாம்.

என்­றா­லும் அப்­படி செய்­யப்­ப­ட­வில்லை என்று அமைச்­சர் சண்முகம் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!