சிங்கப்பூரில் நவீன தயாரிப்பு மையத்தை அமைக்க டைசன் நிறுவனம் திட்டம்

பிரிட்­டிஷ் தொழில்­நுட்ப நிறு­வ­ன­மான டைசன் சிங்­கப்­பூ­ரில் ஒரு புதிய நவீன தயா­ரிப்பு மையத்தை அமைக்­கத் திட்­ட­மிட்டு வரு­கிறது.

சிங்­கப்­பூர், பிரிட்­டன், பிலிப்­பீன்ஸ் ஆகிய மூன்று நாடு­களில் மொத்­தம் 2.75 பில்­லி­யன் பவுண்டை (S$4.9 பி.) அந்­நி­று­வ­னம் முத­லீடு செய்ய இருக்­கிறது. அதன் ஒரு பகு­தி­யாக, சிங்­கப்­பூ­ரில் புதிய தயா­ரிப்பு மையத்தை அமைப்­ப­தற்­கான திட்­டம் இடம்­பெ­று­கிறது.

இந்த முத­லீ­டு­கள் டைசன் தயா­ரிப்­பு­களை இரட்­டிப்­பாக்­கும் என்­றும் 2025ஆம் ஆண்­டிற்­குள் அது புதிய துறை­களில் அடி­யெ­டுத்து வைக்­கும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

அத்­து­டன், மென்­பொ­ருள், ‘மெஷின் லேனிங்’, எந்­தி­ர­னி­யல் போன்ற துறை­களில் கூடு­தல் பொறி­யா­ளர்­கள் வேலைக்கு எடுக்­கப்­ப­டு­வர் என்­றும் அந்­நி­று­வ­னம் ஓர் அறிக்கை வழி­யாக நேற்று தெரி­வித்­தது.

அடுத்த தலை­முறை மோட்­டார் தொழில்­நுட்­பம், இணைப்­புத்­தி­றன், பொருள் அறி­வி­யல் போன்ற துறை­களில் ஆய்­வுப் பணி­க­ளுக்­காக டைசன் நிறு­வ­னம் வளங்­களை ஒதுக்கி வரு­கிறது.

தனது திண்ம நிலை மின்­க­லத் தொழில்­நுட்­பத்தை வணி­க­ம­ய­மாக்கு­வ­தற்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­படும் என்று அந்­நி­று­வ­னம் கூறி­யது. இப்­போது, சிங்­கப்­பூர், பிரிட்­டன், அமெ­ரிக்கா, ஜப்­பான் ஆகிய நாடு­களில் அந்­தத் தொழில்­நுட்­பம் உரு­வாக்­கப்­பட்டு வரு­கிறது. இப்­போ­தைய மின்­க­லங்­க­ளைக் காட்­டி­லும் தூய, செயல்­தி­றன்­மிக்க எரி­சக்திச் சேமிப்பை அந்­தத் தொழில்­நுட்­பம் வழங்­கும் எனக் கூறப்­ப­டு­கிறது.

செயின்ட் ஜேம்ஸ் எரி­சக்தி நிலை­யத்­தில் அமை­யும் டைசன் நிறு­வ­னத்­தின் புதிய அனைத்­து­ல­கத் தலைமை அலு­வ­ல­கம் 2021ஆம் ஆண்­டில் திறக்­கப்­பட இருக்­கிறது. அத­னு­டன், ஆய்வு, உரு­வாக்க வசதி­கள் விரி­வாக்­கம் செய்­யப்­படும் என்­றும் ‘மெஷின் லேனிங்’, எந்­தி­ர­னி­யல் போன்ற துறை­க­ளுக்­கான புதிய ஆய்­வுக்­கூ­டங்­கள் அமைக்­கப்­படும் என்­றும் தெரி­விக்­கப்­பட்டது.

சிங்­கப்­பூ­ரில் டைசன் நிறு­வ­னம் 300 பொறி­யா­ளர்­கள், அறி­வி­ய­ல் வல்லுநர்கள் உட்­பட ஏறக்­கு­றைய 1,200 பணி­யா­ளர்­க­ளைக் கொண்­டுள்­ளது. நூற்­றுக்­கும் மேற்­பட்ட பொறி­யா­ளர்­கள் இவ்­வாண்­டில்­பணி­ய­மர்த்­தப்­பட்­ட­னர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இங்கு அமை­ய­வுள்ள புதிய நவீன தயா­ரிப்பு மையம், தனது பல்­வேறு வச­தி­களை ஒருங்­கிணைத்து, அத்­து­றை­யில் தொழில்­நுட்­பப் புத்­தாக்­கத்தை முடுக்­கி­விடும் என்று டைசன் நிறுவனம் கூறி­யி­ருக்­கிறது.

பொருள் உரு­வாக்­கத்­தில் முனைப்பு காட்­டும் வித­மாக ஒரு புதிய பல்­க­லைக்­க­ழக ஆய்­வுத் திட்­டத்தை நிறு­வ­வும் அந்­நி­று­வ­னம் நோக்­கம் கொண்­டுள்­ளது.

இப்­போ­தைக்கு, ஆக்ஸ்­ஃபர்ட், கேம்­பி­ரிட்ஜ் பல்­க­லைக்­க­ழ­கம், லண்­டன் இம்­பீ­ரி­யல் கல்­லூரி போன்ற பிரிட்­டிஷ் கல்வி நிலை­யங்­க­ளு­டன் கூடிய நீண்­ட­கா­லத் திட்­டங்­கள் உட்­பட மொத்­தம் 22 பல்­க­லைக்­கழக ஆய்­வுத் திட்­டங்­களை அந்­நி­று­வ­னம் கொண்­டுள்­ளது.

இதற்­கி­டையே, புதிய தொழில்­நுட்­பங்­கள், தயா­ரிப்­பு­களில் புத்­தாக்­கத்தை ஊக்­கு­விக்க, பிரிட்­ட­னில் உயர்­நிலை எந்­தி­ர­னி­யல் ஆய்வு, செயற்கை நுண்­ண­றிவு ஆகிய துறை­களில் டைசன் நிறு­வ­னம் தனது கடப்­பாட்டை வலுப்­ப­டுத்தி வரு­கிறது.

அத்­து­டன், புதிய இயந்­தி­ரங்­கள் உரு­வாக்­கத்தை முடுக்­கி­வி­டு­வ­தற்­காக பிலிப்­பீன்­சின் அல­பாங்­கில் ஒரு பிரத்­தி­யேக மென்­பொ­ருள் மையத்தை அது அமைத்து வரு­கிறது.

இப்­போது பிலிப்­பீன்­சின் கலம்­பா­வில் அமைந்­துள்ள டைசன் நிறு­வ­னத்­தின் நவீன தயா­ரிப்பு மையத்­தின் மூலம் ஓராண்­டிற்கு 13 மில்­லி­யன் மின்­னி­லக்க மோட்­டார்­கள் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன.

டைசன் நிறு­வ­னத்­தின் எதிர்­கால வளர்ச்­சிக்கு இந்த மூன்று நாடு­களில் செய்­யப்­படும் முத­லீ­டு­களும் விரி­வாக்­கப் பணி­களும் ஒரு முக்­கிய படி­யாக அமை­யும் என்று அந்­நி­று­வ­னத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி ரோலண்ட் குரூகர் தெரி­வித்­தார்.

“டைசன் வாடிக்­கை­யா­ளர்­கள் பல­ன­டை­யும் வித­மாக எங்­க­ளது தயா­ரிப்­பு­க­ளின் செயல்­தி­ற­னை­யும் நிலைத்­தன்­மை­யை­யும் முடுக்­கி­விடும் வகை­யில் எரி­சக்திச் சேமிப்பு, எந்­தி­ர­னி­யல், மென்­பொ­ருள் போன்ற புதிய தொழில்­நுட்­பங்­களில் முத­லீடு செய்ய இதுவே தரு­ணம்,” என்று திரு குரூ­கர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!