தொய்விலிருந்து மீட்ட உறுதியும் முயற்சியும்

எப்­போ­தும் தமி­ழில் குறைந்­தபட்சத் தேர்ச்­சியே பெறும் நிஹால் இமான் ஸ்மி­திற்கு கடந்த புதன்­கி­ழமை இன்ப அதிர்ச்சி. தொடக்­க­நிலை இறுதித் தேர்­வில், 235 புள்­ளி­க­ளு­டன் தமிழ் உட்­பட எல்­லாப் பாடங்­க­ளி­லும் ‘ஏ’ தகு­தி­யு­டன் தேர்ச்சி.

தாஜோங் தொடக்­கப்­பள்­ளி­யில் பயி­லும் 12 வயது மாண­வர் இமா­னுக்கு, மூன்­றாண்­டு­க­ளுக்கு முன்­னர் தாயார் மறு­ம­ணம் செய்­து­கொண்­டது பெரி­தும் பாதித்­தி­ருந்­தது. படிப்­பில் கவ­னம் சித­றி­ய­தோடு ஆர்­வ­மும் குறைந்­தது.

ஆனால் பள்ளி ஆசி­ரி­யர்­கள் அவ­ரின் மன­நிலை அறிந்து தக்க நேரத்­தில் ஆத­ரவு வழங்­கி­னர். பெற்­றோ­ரும் உறு­து­ணை­யாக இருந்து ஊக்­கம் அளித்­த­னர்.

இமான் தனது உணர்ச்­சி­களை ஒருநிலைப்படுத்தி, படிப்­பில் சிறந்து விளங்க உழைக்க தொடங்­கி­னார்.

தமி­ழ் பேச­வும் எழு­த­வும் சிரமப்­பட்ட இமான், விடா­மு­யற்­சி­யு­டன் உழைத்­தார். பாடத்­தில் ஐயம் எழும்­போ­தெல்­லாம், தமிழ் ஆசி­ரி­ய­ருக்கு குறுந்­த­க­வல் அனுப்­பு­வார். மேலும், இணை­யம் வழி ஆசி­ரி­யர்­களைச் சந்­தித்து குழப்­பங்­களைத் தீர்த்­துக்­கொள்­வார்.

“இமா­னின் பாட்­டி­தான் எப்­போ­தும் இமா­னுக்­குத் தமிழ் கற்றுத் தரு­வார். துணைப்­பாட வகுப்­பு­க­ளுக்­கும் சென்­றார். ஆனால் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றி­னால் பாட்­டி­யை­யும் சந்­திக்­க­ மு­டி­ய­வில்லை, துணைப்­பா­டங்­க­ளுக்­கும் செல்­ல­ மு­டி­ய­வில்லை. ஐந்து மாதங்­க­ளாக இமான் சுய­மா­கவே பாடங்­க­ளைப் படித்து பயிற்­சி­செய்­தார். வீட்­டில் 2 வயது குழந்­தையைக் கவ­னித்­துக்­கொள்­ளும் என்­னால் இமா­னின் படிப்­பில் அதிக கவ­னம் செலுத்த முடி­ய­வில்லை. இமானை நினைத்து எனக்குப் பெரு­மை­யாக இருக்­கிறது,” என்று பூரிப்­பு­டன் கூறி­னார் இமா­னின் தாயார்.

ரோபோ­டிக்ஸ் மீது அதிக ஆர்­வம் கொண்ட இமான், 2019- ஆம் ஆண்டு நடந்த தேசிய ரோபோட்­டிக்ஸ் போட்­டி­யில் தாஜோங் தொடக்­கப் பள்­ளி­யைப் பிர­தி­நி­தித்து கலந்­து­கொண்­டார். மேலும் கொவிட்-19 காலத்­தின்­போது தூர இடை­வெளி, பாது­காப்­பான பழக்­கங்­களைப் பற்­றிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த நண்­பர்­க­ளு­டன் இணைந்து ஒரு காணொ­ளி­யை­யும் வடி­வ­மைத்­தி­ருந்­தார்.

“ஆசி­ரி­யர்­கள் எனக்கு ஊக்­கம் தந்­த­னர். பெற்­றோ­ரும் தொடர்ந்து ஆத­ரவு தந்­த­னர். பாட்டி எனக்கு நிறைய உத­வி­கள் செய்­தார். இவர்­கள் அளித்த ஆத­ரவு படிப்­பில் நான் சிறந்து விளங்க வேண்­டும் என்ற உறு­தியை ஏற்­ப­டுத்­தி­யது.” என்று கூறி­னார் இமான்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!