இனியெல்லாம் வெற்றிதான்

கடந்த ஆண்டு தொடக்­கப்­பள்ளி இறுதித் தேர்­வில், சாதா­ரண நிலை­யில் எல்லா பாடங்­க­ளி­லும் தேர்ச்சி பெற்ற சிவ்­ராஜ் சேகர், கணி­தப் பாடத்­தில் தோல்­வி­யைத் தழு­வி­னார். அத­னால் மீண்­டும் ஹுவா­மின் தொடக்­கப்­பள்­ளி­யில் ஆறாம் ஆண்டு படிப்பை மேற்­கொள்­ள­வும் அனைத்து பாடங்­க­ளை­யும் அடிப்­படை நிலை­யில் எடுக்­கும் சூழ்­நி­லை­யும் ஏற்­பட்­டது.

“சிவ்­ராஜ் மனம் தளர்ந்­து­வி­டக்­கூ­டாது என்­ப­தற்­காக கவ­லையை மறைத்து குடும்பத்தி னர் அனை­வ­ரும் அவ­ருக்கு தைரி­யம் ஊட்டினோம். தேர்­வு­கள் வாழ்­வின் முடி­வல்ல,” என்று எடுத்துச் சொன்­னோம்,” என்­றார் சிவ்ராஜின் தாயார் திரு­மதி சரஸ்­வதி கோபால், 54.

குடும்­பத்­தி­ன­ரின் ஊக்­கு­விப்­பி­னால் இவ்­வாண்டு சிறந்த தேர்ச்சி பெற்ற 13 வயது சிவ்­ராஜ், வழக்­க­நிலை ஏட்­டுக்­கல்­விப் பிரி­வில் உயர்­நிலைப் படிப்­பைத் தொடர தகுதிபெற்­றுள்­ளார்.

“மிக­வும் மகிழ்ச்­சி­யாக இருக்­கிறது. கடந்த ஆண்டு என் நண்­பர்­கள் பல­ரும் உயர்­நி­லைப் பள்­ளிக்­குத் தேர்வு பெற்­ற­போது எனக்­குப் பொறா­மை­யாக இருந்­தது. என் வெற்­றிக்கு என் குடும்­ப­மும் ஆசி­ரி­யர்­க­ளுமே முக்­கிய கார­ணம்,” என்­றார் சிவ்­ராஜ்.

தமிழ் ஆசி­ரி­யர் திரு­வாட்டி கஜன், சிவ்­ரா­ஜுக்கு நம்­பிக்­கை­யூட்­டி­ய­தா­க­வும் வார­யிறுதி நாட்­க­ளில்­கூட ‘ஸூம்’ மெய்­நி­கர் காணொளி வழி கூடு­தல் வகுப்­பு­களை நடத்தி வழி­காட்­டி­ய­தா­க­வும் குறிப்­பிட்­டார் சரஸ்­வதி. “சிவ்­ரா­ஜின் வெற்­றிக்கு அவ­ரின் ஆசி­ரி­யர்­கள் முக்­கிய கார­ணம். நம்­பிக்கை, தைரி­யம், விடா­மு­யற்சி போன்ற நற்­பண்­பு­களைக் கற்­பித்து அவனை வாழ்­வின் அடுத்த கட்­டத்­திற்கு கொண்டு சென்­றுள்­ள­னர்,” என்றார் அவர்.

சிவ்­ரா­ஜின் தந்தை 61 வயது திரு சேகர் நடே­சன், அண்­ணன் 25 வயது திரு ஹரி­ஹ­ரன் சேகர் ஆகி­யோ­ரும் சிவ்­ரா­ஜின் படிப்­பிற்­குப் பக்­க­ப­ல­மாக அமைந்­த­னர். அறிவியலில் ஆர்வம் கொண்டுள்ள சிவ்ராஜ் விமானவியல், ரசாயனம், உயிரியல் துறைகளில் மேற்கல்வியைத் தொடர விரும்புகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!