புலம்பெயர்ந்தோருக்கான செலவுமிக்க நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூருக்கு 14வது இடம்

புலம்­பெ­யர்ந்­தோர் வசிப்­ப­தற்கு அதிக செல­வா­கும் உலக நக­ரங்­க­ளின் பட்­டி­ய­லில் சிங்­கப்­பூர் 14வது இடத்­தைப் பிடித்­துள்­ளது. சிங்­கப்­பூர் நாணய மதிப்பு பல­வீ­ன­ம­டைந்­த­தன் கார­ண­மாக இவ்­வாண்டு சிங்­கப்­பூர் இரு இடங்­கள் இறங்­கி­யது.

டென்­மார்க்­கின் கோபன்­ஹே­க­னும் சுவிட்­சர்­லாந்­தின் பெர்ன் நக­ர­மும் சிங்­கப்­பூரை முந்­தி­ய­தாக இசிஏ இண்­டர்­நே­ஷ­னல் எனப்­படும் மனி­த­வள ஆலோ­சனை நிறு­வ­னத்­தின் ஆய்­வ­றிக்கை தெரி­வித்­தது.

பட்­டி­ய­லின் முதல் இடத்­தில் ஹாங்­காங் தொடர்ந்து நீடிக்­கிறது. தோக்­கி­யோ­வும் நியூ­யார்க்­கும் முறையே இரண்­டா­வது, மூன்­றா­வது இடங்­களில் உள்­ளன.

நிச்­ச­ய­மற்ற அர­சி­யல் நில­வ­ரம் நீடித்­த­தன் கார­ண­மாக ஹாங்­காங்­கில் வீட்டு வாடகை வீழ்ச்­சி­ய­டைந்து. இருந்­த­போ­தி­லும் புலம்­பெ­யர்ந்­தோ­ருக்­கான செல­வு­மிக்க நக­ர­மா­கவே ஹாங்­காங் நீடிப்­ப­தாக அந்த அறிக்கை சுட்­டி­யது.

சிங்­கப்­பூ­ரின் இடம் இறங்­கி­ய­தற்­கான கார­ணத்தை இசிஏ இண்­டர்­நே­ஷ­ன­லின் ஆசி­யா­வுக்­கான இயக்­கு­நர் திரு லீ குவேன் விளக்­கி­னார்.

“கொவிட்-19 கொள்­ளை­நோய் கார­ண­மாக ஏற்­பட்ட உலக நெருக்­கடி சிங்­கப்­பூர் பொரு­ளி­ய­லுக்­குக் கைகொ­டுக்­கக்­கூ­டிய வர்த்­த­கம் வீழ்ச்­சி­ய­டைய கார­ண­மாக அமைந்­தது. இத­னால் வலு­வான டென்­மார்க், சுவிட்­சர்­லாந்து நாண­யங்­க­ளைக் காட்­டி­லும் சிங்­கப்­பூர் நாண­யத்­தின் மதிப்பு பல­வீ­ன­ம­டைந்­தது,” என்­றார் அவர்.

இருப்­பி­னும், ஆசிய அள­வில் சிங்­கப்­பூர் இவ்­வாண்­டும் 6வது இடத்­தைப் பிடித்­துள்­ளது.

“உல­க­ள­வி­லும் ஆசிய அள­வி­லும் பட்­டி­ய­லின் முதல் இடத்­தில் இருக்­கும் ஹாங்­காங்­கில் வீட்டு விலை­கள் அதி­கம்.

“புலம்­பெ­யர்ந்­தோ­ருக்கு அதிக செல­வு­மிக்க நக­ராக இது விளங்க இது­வும் ஒரு கார­ணம்.” என்­றார் திரு குவேன்.

உல­கின் செல­வு­மிக்க நக­ரங்­க­ளின் முதல் பத்து இடங்­களில் சிங்­கப்­பூ­ரோடு சேர்த்து நான்கு ஆசிய நக­ரங்­கள் உள்­ளன. அவை, தோக்­கியோ 2வது இடம், சிங்­கப்­பூர் 6வது இடம், சோல் 8வது இடம், யோகோ­ஹமா 10வது இடம்.

புலம்­பெ­யர்ந்த ஊழி­யர்­க­ளுக்கு ஆகும் செலவு மளி­கைச் சாமான்­கள், ஓய்வு நட­வ­டிக்­கை­கள் போன்ற பய­னீட்­டா­ளர் அனு­ப­விக்­கும் பொருள், சேவை­க­ளின் அடிப்­ப­டை­யில் தர­வ­ரிசை கணக்­கி­டப்­ப­டு­கிறது.

கொவிட்-19 கொள்­ளை­நோய் சூழல் தாய்­லாந்­தி­லும் வியட்­னா­மி­லும் உள்ள நக­ரங்­க­ளை­யும் விட்­டு­ வைக்­க­வில்லை.

இவ்­வாண்டு இவற்­றின் ஒவ்­வொரு நக­ர­மும் குறைந்­த­பட்­சம் 10 இடங்­கள் இறங்­கி­ய­தாக ஆய்­வ­றிக்கை தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!