13 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மாணவி; ஆடவர் மீது கொலைக் குற்றச்சாட்டு, மற்றொருவர் தேடப்படுகிறார்

13 ஆண்­டு­க­ளுக்கு முன்பு காணா­மல் போன 19 வயது மாண­வியை ஆட­வர் ஒரு­வர் கொலை செய்­தி­ருக்­க­லாம் என்று சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

லசால் கலைக் கல்­லூரி மாண­வி­யான குமாரி ஃபெலிஷியா டியோ வெய் லிங்­கைக் கொன்­ற­தாக 35 வயது அக­மது டேனி­யல் முகம்­மது ரஃபாயீ மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

அம­கது டேனி­யல் நேற்று காணொளி மூலம் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டார்.

2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி அதி­காலை 1.39 மணிக்­கும் 7.20 மணிக்­கும் இடைப்­பட்ட நேரத்­தில் புளோக் 19 மெரின் டேர­சின் 10வது மாடி­யில் உள்ள ஒரு வீட்­டில் குமாரி டியோவை அக­மது டேனி­யல் கொன்­ற­தாக நம்­பப்­ப­டு­கிறது.

அவ­ருக்கு எதி­ரா­கக் குற்­றப் பத்­தி­ரிகை வாசிக்­கப்­பட்­ட­போது அக­மது டேனி­யல் சல­ன­மின்றி இருந்­தார்.

32 வயது ரகில் புத்ரா செடியா சுக்­ம­ரா­ஜ­னா­வு­டன் சேர்ந்த குமாரி டியோவை அக­மது டேனி­யல் கொன்­ற­தாக நீதி­மன்ற ஆவ­ணங்­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அக­மது டேனி­யலை கடந்த செவ்­வாய்க்­கி­ழமை கைது செய்­த­தாக போலி­சார் தெரி­வித்­த­னர்.

ரகில் புத்ரா செடி­யாவை போலி­சார் தேடி வரு­கின்­ற­னர். அவர் சிங்­கப்­பூ­ரில் இல்லை என்று நம்­பப்­ப­டு­கிறது.

குமாரி டியோ­வின் உட­லை­யும் போலி­சார் தேடு­கின்­ற­னர்.

குமாரி டியோ­வைக் காண­வில்லை என்று 2007ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3ஆம் தேதி­யன்று அவ­ரது தாயார் போலி­சில் புகார் செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்பே அவர் இறந்­து­விட்­ட­தாக ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.

கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் இரு ஆடவர்களும் குமாரி டியோவும் நண்பர்கள் என நம்பப்படுகிறது,

2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் மெரின் டெரசில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் கட்டடத்தின் மின்தூக்கிக்குள் நுழையும்போது குமாரி டியோ ஆகக் கடைசியாக உயிருடன் காணப்பட்டார்.

ஆனால் 2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி அதிகாலை நேரத்தில் குமாரி டியோ அந்தக் கட்டடத்தின் 10வது மாடியில் உள்ள வீட்டைவிட்டு சென்றதாக ஆடவர்கள் இருவரும் தெரிவித்திருந்தனர். குமாரி டியோ மாயமானது தொடர்பாக போலிசார் தீவிர விசாரணை நடத்தியும் குற்றம் நிகழ்ந்திருப்பதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை.

சம்பந்தபட்ட வீட்டுக்கு அருகில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆராய்ந்தும் பலனில்லாமல் போனது.

குமாரி டியோ காணா­மல் போன­தாக வழக்கு பதி­வா­னது. அவர் காணா­மல் போன­தற்­கும் அந்த இரு ஆட­வர்­க­ளுக்­கும் எவ்­வித தொடர்­பை­யும் போலி­சா­ரால் கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை.

தீர்க்­கப்­ப­டாத இத்­த­கைய வழக்கு­களை அடிக்­கடி மறு­ஆய்வு செய்­வது வழக்­கம் என்று தெரி­வித்த போலி­சார், அப்­போது குமாரி டியோ­வின் குடும்­பத்­தார், சாட்­சி­கள் ஆகி­யோ­ரி­டம் விசா­ரணை நடத்­தப்­பட்­ட­தா­கக் கூறி­னர்.

குமாரி டியோ­வின் வங்­கிக் கணக்­கு­கள், மின்­னஞ்­சல்­கள், சமூக ஊட­கத்­த­ளங்­கள் ஆகி­யவை அண்­மை­யில் பயன்­ப­டுத்­தப்­

பட்­டனவா என்­ப­தைக் கண்­ட­றிய சோதனை நடத்­தப்­பட்­டது.

இந்­நி­லை­யில், இந்த வழக்­கில் திருப்­பு­முனை ஏற்­பட்­டது. குமாரி டியோ காணா­மல் போன­போது அவர் தமது கைபே­சி­யை­யும் மடிக்­

க­ணினி­யை­யும் வைத்­தி­ருந்­தார் என்று விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது. அவற்­றில் ஒன்று 35 வயது அக­மது டேனி­ய­லி­டம் இருப்­ப­தாக நம்­பப்­ப­டு­கிறது. இதன் கார­ண­மாக அவர் கைது செய்­யப்­பட்­டார்.

இந்த வழக்­கிற்குத் தீர்வு காண கடு­மை­யாக உழைத்த அதி­கா­ரி­

க­ளுக்கு மத்­திய புல­னாய்­வுத் துறை இயக்­கு­நர் மூத்த உதவி ஆணை­யர் ஹாவ் குவாங் ஹுவீ பாராட்டு தெரி­வித்­தார்.

2007ஆம் ஆண்­டில் குமாரி டியோ காணா­மல் போனதை அடுத்து அவ­ரது குடும்­பத்­தா­ரும் நண்­பர்­களும் பல இடங்­களில் தேடி­னர். குமாரி டியோ­வின் படத்­தைக் கொண்ட ஆயி­ரக்­க­ணக்­கான துண்டுபி­ர­சு­ரங்­களை அவர்­கள் பொது­மக்­க­ளுக்கு விநி­யோ­கம் செய்­த­னர்.

அகமது டேனியல் இம்மாதம் 24ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!