கிளார்க் கீ கைகலப்பு சம்பவம் தொடர்பில் ஐவர் கைது

மர­ணம் விளை­விக்­கக்­கூ­டிய ஆயு­தத்­தைக் கொண்டு கிளார்க் கீ பகு­தி­யில் சனிக்­கி­ழமை இரவு நடந்த சண்டை தொடர்­பில் ஐந்து பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். போலி­சார் சம்­பவ இடத்­துக்கு வந்­த­தும் யு டோங் சென் ஸ்தி­ரீட்டை விட்டு 21 வய­துக்­கும் 40 வய­துக்­கும் இடைப்­பட்ட அந்த ஐவ­ரும் ஓடி­விட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

சண்­டை­யில் காய­ம­டைந்த 27 வயது மாது, 36 வயது ஆட­வர் இரு­வ­ரும் சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­போது சுய­நி­னை­வு­டன் இருந்­த­னர்.

கல­வ­ரம் செய்­த­தன் தொடர்­பில் 29 வயது ஆட­வர் ஒரு­வ­ரை­யும் போலி­சார் கைது செய்­த­னர்.

போலி­சா­ரி­டம் சிக்­கிய ஐவ­ரைத் தவிர, சண்­டை­யில் ஈடு­பட்ட மற்ற நபர்­க­ளை­யும் போலி­சார் தீவி­ர­மா­கத் தேடி வரு­கின்­ற­னர்.

அரு­கில் இருந்த உண­வ­கம் ஒன்­றில் ஆரம்­பித்த வாக்­கு­வாதத்தை அடுத்து இச்­சண்டை மூண்­ட­தாக ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணை­கள் கூறு­கின்­றன.

சண்­டை­யைக் காட்­டும் காணொளி ஒன்றை ஃபேஸ்புக் பய­னா­ளர் நவின் குமார் தம் பக்­கத்­தில் பதி­வேற்­றம் செய்­தி­ருந்­தார். கிட்­டத்­தட்ட 80,000 பேர் பார்­வை­யிட்­டுள்ள அக்­கா­ணொளி­யில், பல பேர் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் மோதித் தள்­ளு­வ­தைக் காண முடி­கிறது. மூன்று நிமி­டக் காணொளி இறு­தி­யில் நடை­பாதை ஒன்­றின் தரை­யி­லும் சுவர்ப் பகுதி­யி­லும் ரத்­தம் தெறித்­தி­ருப்­ப­தைப் பார்க்­க­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!