அமைச்சர் சான்: கொவிட்-19 தடுப்பூசி விநியோகத்தில் சிங்கப்பூர் உதவ முடியும்

கொரோனா கிரு­மிக்கு எதி­ரான தடுப்­பூ­சி­யைத் தயா­ரிக்­கும் பிர­தான மருந்­தாக்க நிறு­வ­னங்­க­ளு­டன் சிங்­கப்­பூர் பேச்­சு­வார்த்தை நடத்­திக் கொண்­டி­ருக்­கிறது.

அதன் தொடர்­பில் அந்­தத் தடுப்­பூ­சி­களை இந்த வட்­டா­ரத்­தில் விநி­யோ­கிப்­ப­தில் பங்­க­ளிக்க முடி­யும் என்று வர்த்­தக தொழில் அமைச்­சர் சான் சுன் சிங் தெரி­வித்­துள்­ளார்.

“தடுப்­பூசி தயா­ரிப்­பில் சிங்­கப்­பூர் பங்­க­ளிக்­கா­மல் இருந்­தி­ருக்­க­லாம்,” என்ற திரு சான், “அமெ­ரிக்­கா­வி­லும் ஐரோப்­பா­வி­லும் கொவிட்-19 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­ரித்த வண்­ணம் இருப்­ப­தால், தடுப்­பூசி தயா­ரிப்­பி­லும் அதன் விநி­யோ­கத்­தி­லும் சிங்­கப்­பூ­ரின் உத்­தேச பங்­க­ளிப்பை எதிர்­பார்க்­க­லாமா,” என்று கேட்­கப்­பட்ட கேள்­விக்­குப் பதி­ல­ளித்­தார்.

“தடுப்­பூசி தயா­ரிப்பு அமெ­ரிக்­கா­வி­லும் ஐரோப்­பா­வி­லும் நடந்­து­கொண்­டி­ருக்­கும் வேளை­யில், அந்­தத் தயா­ரிப்­புத் திட்­டத்­தின் இறு­திக்­கட்­டப் பணி­யான விநி­யோ­கத்­தில் சிங்­கப்­பூர் உதவ முடி­யும்.

அந்­தத் தயா­ரிப்­புப் பணி­யில் பொட்­ட­லம் போடு­வ­தி­லும் சிங்­கப்­பூர் பங்­க­ளிக்க முடி­யும். அந்­தப் பணியை சிங்­கப்­பூ­ரி­லி­ருந்­த­ப­டியே செய்ய முடி­யும். அதன் பிறகு தடுப்­பூ­சி­களை இந்த வட்­டார நாடு­களுக்கு விநி­யோகிக்­கும் பணியை மேற்­கொள்ள முடி­யும்,” என்­றும் அமைச்­சர் விவ­ரித்­தார்.

ஏ*ஸ்டார் எனப்­படும் அறி­வி­யல், தொழில்­நுட்ப ஆய்­வுக் கழ­கத்­துக்கு நேற்று மேற்­கொண்ட வரு­கைக்­குப் பிறகு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய திரு சான், ‘ஏ*ஸ்டார்’ அமைப்­பும் மாற்­றுப் புர­தச் சத்து நிறு­வ­ன­மான ‘பெர்­ஃபெக்ட் டே’யும் இணைந்து அமைக்­க­வி­ருக்­கும் புதிய ஆய்வு, மேம்­பாட்­டுக் கூடம் பற்றி அறி­வித்­தார்.

தடுப்­பூசி விநி­யோ­கம் பற்றி பேசு­கை­யில், கடந்த வாரம் தாம் ‘ஃபெட்எக்ஸ்’ எனும் பெரிய தள­வாட நிறு­வ­னத்­துக்­குச் சென்­ற­தா­க­வும் தடுப்­பூசி விநி­யோ­கம் தொடர்­பில் அந்­நி­று­வ­னம் கொண்­டுள்ள பெரிய அள­வி­லான செய­லாக்கம் மற்­றும் ஆற்­றல் வெளிப்­பா­டு­க­ளைக் கண்­ட­றிந்­த­தா­க­வும் திரு சான் விளக்­கி­னார்.

“தடுப்­பூசி விநி­யோ­கம் தொடர்­பி­லான ஆற்­றல்­ சிங்­கப்­பூ­ரி­டம் இருக்­கிறது. தடுப்­பூ­சி­களை சிங்­கப்­பூ­ருக்கு கொண்டு வரு­வ­தில் மட்­டு­மல்­லாது, தேவை ஏற்­பட்­டால், அவற்றை இந்த வட்­டார நாடு­களுக்கு விநி­யோ­கிக்க, நாம் கடந்த பல ஆண்­டு­க­ளாக வளர்த்­துக்­கொண்­டுள்ள ஆற்­றல்­க­ளைப் பயன்­ப­டுத்தி செயல்­ப­டுத்த முடி­யும்,” என்­றும் அமைச்­சர் சான் நம்பிக்கை தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!