பெண்கள் மீது காரை மோதியவருக்கு அபராதம், வாகனம் ஓட்டத் தடை

கார் நிறுத்­து­மி­டத்­தில் இருந்து வெளி­யே­றும்­போது இரண்டு பெண்­கள் மீது காரை மோதிய 33 வய­தான டான் சாக் யீ எனும் மாதுக்கு $3,500 அப­ரா­த­மும் ஒன்­பது மாதங்

­க­ளுக்கு வாக­னம் ஓட்­டத் தடை­யும் விதிக்­கப்­பட்­டது. கவ­னக்­கு­றை­வால் கடும் காயம் விளை­வித்த ஒரு குற்­றத்தை டான் ஒப்­புக்­கொண்­டார். அத்­த­கைய மற்­றொரு குற்­றச்­சாட்­டும் தீர்ப்பு வழங்­கும்­போது கருத்தில் ­கொள்­ளப்

­பட்­டது.

கடந்த 2019ஆம் ஆண்டு அக்­டோ­பர் மாதம் 27ஆம் தேதி மாலை 4.40 மணி­ய­ள­வில் ஜூரோங் ஈஸ்ட் ஸ்தி­ரீட் 24ல் உள்ள புளோக் 252 அரு­கில் இருந்த கார் நிறுத்­து

­மி­டத்­தி­லி­ருந்து காரை எடுத்­துக்­கொண்டு திரு­வாட்டி டானும் அவ­ரது கண­வ­ரும் கிளம்­பி­னர்.

திரு­வாட்டி டான் காரை ஓட்­டி­னார். அவ­ரது கண­வர் முன் இருக்­கை­யில் அமர்ந்­தி­ருந்­தார். கார் நிறுத்­து­மி­டத்தை விட்டு வெளி­யே­றும் இடத்­தில் சாலை­யைக் கடந்து­ கொண்­டி­ருந்த 2 பெண்­கள் மீது கார் மோதி­யது. காய­ம­டைந்த பெண்­களை ஏற்­றிக்­கொண்டு இங் டெங் ஃபோங் மருத்­து­வ­ம­னைக்­குச் செல்ல உத­வி­னார் சிற்றுந்து ஓட்­டு­நர் ஒரு­வர். திரு­வாட்டி டானின் கண­வ­ரும் காய­ம­டைந்­த­வர்­க­ளு­டன் மருத்­து­வ­ம­னைக்­குச் சென்­றார். தம்­மு­டைய காரில் திரு­வாட்டி டானும் மருத்­து­வ­ம­னைக்­குச் சென்­றார்.

காய­ம­டைந்­த­வர்­களில் ஒரு­வர் 48 வயது மாது. அவ­ரது மார்­பெ­லும்­பு­களில் முறிவு ஏற்­பட்­ட­து­டன் மார்­பி­லும் வலது முட்­டி­யி­லும் லேசான காயங்­கள் ஏற்­பட்­டன.

காய­ம­டைந்த மற்­ற­வர் 55 வயது மாது. அவ­ரது முழங்­கை­யில் லேசான காயம் ஏற்­பட்­டது. காய­

ம­டைந்த இரு­வ­ரும் விபத்து குறித்து போலி­சில் புகார் அளித்­த­னர்.

கவ­னக்­கு­றை­வால் கடும் காயம் விளை­வித்­த­தற்கு திரு­வாட்டி டானுக்கு ஈராண்­டு­கள் வரை சிறை, $5,000 வரை அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டி­ருக்­க­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!