பொஃப்மா சட்டத்தின்கீழ் திருத்த உத்தரவு பிறப்பிப்பு

கொவிட்-19 தடுப்­பூ­சி­யால் மிகக் கடு­மை­யான பாதிப்பு ஏற்­பட்­டுள்­ள­தாக ஃபேஸ்புக் பக்­கம் ஒன்­றில் பதிவு செய்­யப்­பட்­டதை அடுத்து, அதற்கு எதி­ராக பொஃப்மா எனப்­படும் இணை­யம்­வழி பொய்ச்­செய்­திக்­கும் சூழ்ச்­சித்­தி­ற­னுக்­கும் எதி­ரான சட்­டம் மூலம் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கிறது.

சம்­பந்­தப்­பட்ட பதி­வுக்கு திருத்த உத்­த­ர­வைப் பிறப்­பிக்­கு­மாறு பொஃப்மா அலு­வ­ல­கத்­துக்கு சுகா­தார அமைச்­சர் உத்­த­ர­விட்­டார்.

இத­னைத் தொடர்ந்து, கோ மெங் செங்­கின் மக்­கள் சக்தி கட்சி மற்­றும் சத்து சிங்­கப்­பூரா ஃபேஸ்புக் பக்­கங்­க­ளுக்­கும் சிங்­கப்­பூர் 'அன்­சென்­சர்ட்' இணை­யப்­பக்­கத்­துக்­கும் திருத்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூர் மருத்­து­வர் ஒரு­வ­ருக்கு கொவிட்-19 தடுப்­பூசி பக்­க­வா­தத்தை விளை­வித்­தி­ருப்­ப­தாக அல்­லது பக்­க­வா­தம் ஏற்­பட பெரும் அள­வில் பங்­க­ளித்­த­தாக கோ மெங் செங்­கின் மக்­கள் சக்தி கட்சி மற்­றும் சத்து சிங்­கப்­பூரா ஃபேஸ்புக் பக்­கங்­களில் இம்­மா­தம் 2ஆம் தேதி­யன்று பதிவு செய்­யப்­பட்­டது.

கொவிட்-19 தடுப்­பூசி 81 வயது ஆட­வ­ருக்கு மர­ணத்தை ஏற்­ப­டுத்­தி­ய­தாக 7ஆம் தேதி­யன்று அதே ஃபேஸ்புக் பக்­கங்­களில் தெரி­விக்­கப்­பட்­டது. அதே நாளில் அதே செய்­தியை சிங்­கப்­பூர் 'அன்­சென்­சர்ட்' இணை­யப்­பக்­கம் பதி­வேற்­றம் செய்­தது. அந்­தச் செய்­தியை அது தனது ஃபேஸ்புக் பக்­கத்­தி­லும் பகிர்ந்­து­கொண்­டது.

"இந்­தக் குற்­றச்­சாட்­டு­கள் பொய்­யா­னவை. சிங்­கப்­பூ­ரால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு பொது­மக்­க­ளுக்­கு செலுத்­தப்­படும் ஃபைசர்-பயோ­என்­டெக் தடுப்­பூசி மற்­றும் மொடர்னா தடுப்­பூ­சி­யால் மார­டைப்பு, பக்­க­வா­தம் ஏற்­படும் அபா­யம் இருப்­ப­தற்­கான ஆதா­ரம் ஏதும் இல்லை," என்று சுகா­தார அமைச்சு கூறி­யது.

மருத்­து­வர் பக்­க­வா­தத்­தால் பாதிக்­கப்­பட்­ட­தற்கு கொவிட்-19 தடுப்­பூசி கார­ண­மாக இருப்­ப­தற்­கான சாத்­தி­யக்­கூ­று­கள் மிகக் குறைவு என்று அவ­ருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்­து­வக் குழு தெரி­வித்­துள்­ளது.

இது­கு­றித்து இம்­மா­தம் 4ஆம் தேதி­யன்று மவுண்ட் எலி­ச­பெத் மருத்­து­வ­மனை விளக்­க­ம­ளித்­த­தா­க­வும் அமைச்சு கூறி­யது.

ஃபேஸ்புக் பக்­கங்­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள 81 வயது முதி­ய­வ­ரின் மர­ணத்­துக்கு இதய நோய் கார­ணம் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் அமல்­ப­டுத்­தப்­பட்­டுள்ள பொய்ச்­செய்­தி­க­ளுக்கு எதி­ரான சட்­டத்­தின்­கீழ், திருத்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­படும் இணை­யப்­பக்­கங்­கள் அவற்­றின் பதி­வு­க­ளுக்­குப் பக்­கத்­தில் திருத்­தத்­தைப் பதி­வேற்­றம் செய்ய வேண்­டும்.

பிறப்­பிக்­கப்­பட்ட திருத்த உத்­த­ர­வுக்கு திரு கோவும் சிங்­கப்­பூர் 'அன்­சென்­சர்ட்' இணை­யப்­

பக்­கத்தை நிர்­வ­கிப்­ப­வ­ரும் கட்­டுப்­பட்­டுள்­ள­னர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்­துக்­குப் பிறகு இது­தான் முதல்­

மு­றை­யா­கப் பிறப்­பிக்­கப்­பட்­டுள்ள முதல் திருத்த உத்­த­ரவு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!