முகக்கவச விவகாரம்: 55 வயது மாது எட்டி உதைக்கப்பட்டது குறித்து போலிஸ் விசாரணை

நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த 55 வயது மாது முகக்கவசம் அணியாததால் அவரது மார்பில் எட்டி உதைத்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் ஓர் ஆடவரிடம் போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இனத்தைதக் குறிப்பிட்டு அந்த நபர் தூற்றியதாகவும் கூறப்படுகிறது.

தனியார் துணைப்பாட ஆசிரியரான நிட்டா விஷ்ணுபாய் கடந்த வெள்ளிக்கிழமை சுவா சூ காங் எம்ஆர்டி நிலையத்திலிருந்து விளையாட்டரங்கத்தை நோக்கி வேகமாக நடந்து சென்றுகொண்டிருந்தார்.

இந்திய சிங்கப்பூரரான அவர், மூச்சுவிட சிரமமாக இருந்ததால் முகக்கவசத்தை மூக்குக்குக் கீழ் இறக்கியிருந்தார். அப்போது ஒரு பெண்ணுடன் வந்த நபர் அவரை நோக்கி சத்தம் போட்டார்.

“முகக்கவசத்தை மூக்குக்கு மேல்போடுமாறு அந்த நபர் கத்தினார். உடற்பயிற்சி செய்வதால் முகக்கவசத்தை இறக்கியிருக்கிறேன் என்று அவரிடம் பொறுமையாகக் கூறினேன்,” என்றார் நிட்டா.

ஆனால் அதை தெரிந்தும் இருபது வயதுகளில் இருந்த அந்த ஆடவர் மீண்டும் சத்தம் போட்டார்.

“தகாத வார்த்தைகளைப் பேசினார். இன ரீதியில் அவர் தூற்றியதால் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதன் பிறகு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடாமல், ‘கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும்’ என்று மட்டும் கூறி நகர்ந்துவிட்டேன். சில மீட்டர் தொலைவில் இருந்த அந்த நபர் ஆத்திரத்துடன் ஓடி வந்து என் மீது பறந்து எட்டி உதைத்தார். இதனால் நான் கீழே விழுந்துவிட்டேன்,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் நிட்டா கூறினார்.

கீழே விழுந்ததில் அவருக்கு கை, கால்களில் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன. அந்த நபருடன் இருந்த பெண்ணும் அவரை தடுத்து நிறுத்தவில்லை என்றார் நிட்டா.

அன்று நடந்த சம்பவத்தை கணவரிடமும் 26, 27 வயதில் உள்ள இரண்டு பிள்ளைகளிடமும் தெரிவித்த அவர், பின்னர் போலிசிடம் புகார் செய்தார்.

இதனை உறுதி செய்த போலிசாரும் சம்பவத்தை விசாரித்து வருவதாகத் தெரிவித்தனர்.

தற்போதைய விதிமுறைப்படி கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் முகக்கவசத்தை அகற்றலாம்.

ஆனால் உடற்பயிற்சி முடிந்ததும் முகக்கவசத்தை மீண்டும் அணிய வேண்டும்.

கடந்த மே 2ஆம் தேதி பாசிர் ரிஸில் இதேபோன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

இந்தியாவில் இருந்து வந்தவர்களை நோக்கி ஒருவர், கிருமியைப் பரப்புவதாகக் கூறி கத்திக் கூச்சல் போட்டார்.

சிங்கப்பூரர் என்று நம்பப்படும் அவர், “திரும்பிப் போ, இங்கே வந்து கிருமியைப் பரப்பாதே,” என்று இந்திய குடும்பத்திடம் தகாத வார்த்தைகளைச் சொல்லி சத்தம் போடுவதை இணையத்தில் பரவிய காணொளி காட்டுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!