புதிய தொற்றுகள் எதிர்பார்க்கப்பட்டாலும் பள்ளிகளில் கிருமி பரவிய சான்று இல்லை

மேலும் சில மாண­வர்­க­ளுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்­யப்­ப­ட­லாம் என்­ற­போ­தும், இங்­குள்ள பள்­ளி­க­ளின் வழியே கிருமி பர­வி­ய­தற்­கான சான்­று­கள் எதும் இது­வரை இல்லை.

கல்வி அமைச்­சர் லாரன்ஸ் வோங், கொவிட்-19 அமைச்­சு­கள்­நி­லைப் பணி­க்­கு­ழு­வின் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் நேற்று தெரி­வித்­தார்.

இது­வரை கிரு­மித்­தொற்று உறு­தி­யான மாண­வர்­க­ளுக்­குப் பள்­ளிக்கு வெளியே தொற்று ஏற்­பட்­ட­தாக அவர் குறிப்­பிட்­டார்.

முன்­னெச்­செ­ரிக்­கை­யாக, பள்ளி களில் பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் கடு­மை­யாக்­கப்­பட்­டுள்­ளன.

"பள்­ளி­களில் உள்ள சூழ்­நிலையை அணுக்­க­மாக கவ­னித்து, தேவைப்­பட்­டால் கூடு­தல் நட­வ­டிக்­கை­களை எடுப்­போம்," என்று திரு வோங் தெரி­வித்­தார்.

பள்­ளி­க­ளுக்­குச் சென்று வரும் மாண­வர்­க­ளின் பாது­காப்பை உறுதி செய்ய, விழிப்­பு­டன் இருக்­கும்­படி பள்ளி முதல்­வர்­க­ளுக்­கும் ஆசி­ரி­யர்­க­ளுக்­கும் நினை­வூட்­டப்­பட்­டுள்­ள­தாக திரு வோங் சொன்­னார்.

அண்­மை­யில் கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்ட மாண­வர்­கள் பெரும்­பா­லா­ன­வர்­க­ளுக்கு, தனி­யார் துணைப்­பா­டப் பள்­ளி­யில் உள்ள ஒரு துணைப்­பாட ஆசி­ரி­ய­ரு­டன் தொடர்பு இருந்­த­தாக சுகா­தார அமைச்­சின் மருத்­து­வச் சேவை­கள் துறை­யின் இயக்­கு­நர் கென்­னத் மாக் கூறி­னார்.

மாண­வர்­கள், தனி­மைப்­ப­டுத்­தப் பட்­டி­ருந்­த­போது, அவர்­க­ளுக்கு கிரு­மித்­தொற்று பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக இணைப் பேரா­சி­ரி­யர் மாக் கூறி­னார்.

கிருமி தொற்­றிய துணைப்­பாட ஆசி­ரி­யர் பற்றி சுகா­தார அமைச்சு கடந்த வியா­ழக்­கி­ழமை இரவு மேல்­வி­வ­ரங்­களை அளித்­தது.

அந்த 50 வயது சிங்­கப்­பூர் மாது, 'லர்­னிங் பாயிண்ட்' எனும் தனி­யார் துணைப்­பா­டப் பள்­ளி­யில் பணி­யாற்றி வரு­கி­றார். மே 3ம் தேதி அவ­ருக்கு கொவிட்-19 அறி­கு­றி­கள் தென்­பட்­டன. மே 11ம் தேதி அவ­ருக்கு பரி­சோ­தனை செய்­யப்­பட்டு மறு­நாள் கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

துணைப்­பாட ஆசி­ரி­யர் முகக் கவ­சத்­துக்­குப் பதில் முகக்­காப்பு அணிந்­தி­ருந்­தாரா என்ற கேள்­விக்கு, முகக்­க­வ­சம் அணி­வது தொடர்­பி­லான விதி­மு­றை­கள் கடு­மை­யாக்­கப்­படும் என்று இணைப் பேரா­சி­ரி­யர் மாக் பதில் அளித்­தார்.

முன்­ன­தாக பள்­ளி­வ­குப்­பு­களில் முகக்­காப்­பு­களை அணிய அனு­மதிக்­கப்­பட்­டது. இனி முகக்­க­வ­சங்­களை அணி­வது வலு­வாக ஊக்­கு­விக்­கப்­படும் என்­றார் அவர்.

பள்ளி ஆசி­ரி­யர்­களில் பெரும்­பா­லா­னோர் முகக்­க­வ­சங்­கள்­தான் அணி­கின்­ற­னர். ஆனா­லும் பள்­ளி­களில் முகக்கவ­சத்­துக்கு பதில் முகக்­காப்பு பயன்­ப­டுத்­தப்­ப­டாது என்ற கொள்கை எல்லா பள்­ளி­களி­லும் நடப்­புக்கு வரும் என்று அவர் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!