கிருமித்தொற்றால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட வாய்ப்பில்லை: நிபுணர்கள்

சிங்­கப்­பூ­ரில் கடந்த ஒரு மாதத்­தில் கிட்­டத்­தட்ட 30 பள்­ளி­க­ளைச் சேர்ந்த 40க்கும் மேற்­பட்ட மாண­வர்­களை கொவிட்-19 தொற்­றி­விட்­டது.

இருப்­பி­னும், குழந்­தை­களை கொரோனா தொற்ற இப்­போ­தைக்கு அதிக வாய்ப்­புள்­ளது என்று கூறு­வதற்­குப் போது­மான சான்­று­கள் இல்லை என்­றும் அவர்­கள் ஒரு­வருக்­கொ­ரு­வர் அரு­கில் இருப்­பதே அண்­மைய தொற்று அதி­க­ரிப்­புக்­குக் கார­ண­மாக இருக்­க­லாம் என்­றும் நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

பொது­வாக, புதிய உரு­மா­றிய கிரு­மி­கள் அதி­கம் தொற்­றக்­கூ­டி­யவை என்று அவர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

லேனிங் பாய்ண்ட் துணைப்­பாட நிலைய கிரு­மித்­தொற்­றுக் குழு­மத்­தில் மட்­டும் நேற்று முன்­தி­னம் வரை 28 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். அதே நாளில், பள்­ளி­யில் கொரோனா தொற்­றிய முதல் சம்­ப­வ­மும் பதி­வாகி இருக்­கிறது.

ஆயி­னும், இப்­போது சுற்­றிக்­கொண்­டி­ருக்­கும் உரு­மா­றிய கிருமி­கள் குழந்­தை­களை அதி­கம் பாதிக்கவல்­லவை என்­ப­தற்­குப் போது­மான சான்­று­கள் இல்லை என்­கி­றார் சிங்­கப்­பூர் தேசிய பல்­கலைக்­க­ழ­கம், யோங் லூ லின் மருத்­து­வப் பள்­ளி­யின் தொற்­று­நோய்­கள் உரு­மாற்ற ஆய்­வு­த் திட்­டத்­தின் துணை இயக்­கு­நர் பேரா­சி­ரி­யர் பால் தம்­பையா.

மாறாக, துணைப்­பாட நிலை­யம் அல்­லது பள்­ளிப் பேருந்து போன்ற சூழல்­களே அதி­க­மான குழந்­தை­களை கொவிட்-19 தொற்றியதற்குக் கார­ணம் என்­றார் அவர்.

"முதலில் பர­விய கொரோனா கிரு­மி­யைக் காட்­டி­லும் பி1617 எனும் உரு­மா­றிய கிருமி குழந்­தை­களை அதி­கம் பாதிக்­க­லாம் என்­பதை இது சுட்­ட­வில்லை. இந்­தி­யா­வில் கொரோனா முதல் அலை­யி­லும் இரண்­டாம் அலை­யி­லும் பாதிக்­கப்­படும் குழந்­தை­க­ளின் விகி­தம் ஒத்த அள­வில் இருப்­பதை பிடிஐ செய்தி நிறு­வ­னத்­தின் அதி­கா­ர­பூர்வ தரவு­கள் காட்­டு­கின்­றன," என்று பேரா­சி­ரி­யர் தம்­பையா கூறி­னார்.

இளம் வய­துப் பிரி­வி­ன­ரி­டத்­தில் அதி­க­ள­வில் பரி­சோ­த­னை­கள் நடத்­தப்­ப­டு­வ­தும் குழந்­தை­க­ளி­டத்­தில் தொற்று அதி­க­மா­கப் பதி­வா­ன­தற்கு ஒரு கார­ண­மாக இருக்­க­லாம் என்­றார் என்­யு­எஸ் யோங் லூ லின் மருத்­து­வப் பள்­ளி­யின் தொற்­று­நோய்­கள் உரு­மாற்ற ஆய்­வு­த் திட்­டத்­தின் இணை இயக்­கு­ந­ரும் இணைப் பேரா­சி­ரி­ய­ரு­மான சில்வி அலோன்சோ.

என்­யு­எஸ் சோ சுவீ ஹாக் பொதுச் சுகா­தா­ரப் பள்­ளி­யின் அனைத்­து­ல­கச் சுகா­தார துணைத் தலை­வ­ரும் இணைப் பேரா­சி­ரி­யரு­மான சு லீ யாங் கூறு­கை­யில், "கைக்­கு­ழந்­தை­களும் நீரி­ழிவு, நுரை­யீ­ரல் நோய் போன்ற நோய்­க­ளால் பாதிக்­கப்­பட்­டுள்ள குழந்­தை­களும் கடு­மை­யான கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட வாய்ப்­பி­ருக்­க­லாம். ஆனால், பொது­வாக பெரி­ய­வர்­க­ளைக் காட்­டி­லும் 18 வய­துக்­குக் குறை­வா­ன­வர்­கள் கடு­மை­யான கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட வாய்ப்பு குறை­வு­தான்," என்­று சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!