$1 மி. வீடுகள் மீது மோகம்: சாதனை அளவாக இவ்வாண்டு இதுவரை 87 வீடுகள் விற்பனை

இவ்­வாண்­டின் முதல் ஐந்து மாதங்­களில் 87 வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­கள் குறைந்­த­பட்­சம் $1 மில்­லி­யன் விலை­யில் கைமாறி உள்­ளன. கடந்த ஆண்டு முழு­வ­தும் $1 மில்­லி­யன் மதிப்­புள்ள 82 வீடு­கள் மட்­டுமே விற்­கப்­பட்­டன.

இதன் மூலம் இவ்­வாண்­டில் விற்­கப்­பட்ட $1 மில்­லி­யன் வீடு

­க­ளின் எண்­ணிக்­கையே ஆக அதி­கம் என்ற சாதனை நிகழ்த்­தப்­பட்டு உள்­ளது.

கடந்த 2012ஆம் ஆண்­டில்­தான் வீவக வீடு ஒன்று $1 மில்­லி­யன் என்ற அள­வில் விற்­கப்­பட்ட முதல் வீடு. அந்த ஆண்­டில் அந்த மதிப்­புக்கு இரு வீடு­கள் மட்­டுமே விலை­போ­யின.

மொத்­த­மாக, நேற்று முன்

­தி­னம் மே 31 வரை 389 வீவக வீடு­கள் $1 மில்­லி­ய­னுக்கு மேல் விற்­கப்­பட்டு உள்­ளன. அத்­து­டன் இந்த அள­வுக்கு விலை உள்ள வீடு­கள் மீதான மோகம் அதி­க­ரித்து வரு­வ­தா­க­வும் கொவிட்-19 கொள்­ளை­நோய் நில­வ­ரம் அதற்­குத் தடை­போ­ட­வில்லை என்­றும் தெரிய வந்­துள்­ளது.

கடந்த மாதம் ஹாலந்து டிரைவ் புளோக் 18சி-யில் 117 சதுர மீட்­டர் பரப்­ப­ளவு கொண்ட ஐந்­தறை வீடு ஒன்று $1.21 மில்­லி­ய­னுக்கு விற்­கப்­பட்­டது.

2005ஆம் ஆண்­டில் அறி­விக்­கப்­பட்ட தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட ஒட்டு­மொத்த மறு­மேம்­பாட்­டுத் திட்­டத்­தின் மாற்­றுத் தளத்­தில் கட்­டப்­பட்­டது அந்த ஹாலந்து டிரைவ் புளோக். விற்­கப்­பட்­ட­போது அந்த புளோக் வீட்­டின் குத்­தகை 90 ஆண்­டு­கள், ஐந்து மாதங்­கள் எஞ்­சி­யி­ருந்­தன.

இதே­போல இவ்­வாண்­டின் ஜன­வ­ரி­யி­லும் பிப்­ர­வ­ரி­யி­லும் இரு வீடு­கள் $1.21 மில்­லி­ய­னுக்கு விற்­கப்­பட்­டன. அதன் ஒரு வீடு பீஷான் ஸ்தி­ரீட் 24லும் மற்­றொரு வீடு புக்­கிட் தீமா­வில் உள்ள புளோக் 2 தோ யி டிரை­வி­லும் அந்­தத் தொகைக்­குக் கைமா­றின.

ஏப்­ரல் மாதம், பீஷான் ஸ்தி­ரீட் 24ல் நேச்­சுரா லாஃப்ட்­டில் உள்ள வடி­வ­மைப்பு, கட்­டு­மா­னம் மற்­றும் விற்­ப­னைத் திட்­டத்­தில் கட்­டப்­பட்ட 120 சதுர மீட்­டர் அள­வுள்ள ஐந்­தறை வீடு ஒன்று $1.25 மில்­லி­ய­னுக்கு விலை­போ­னது. இதன் எஞ்­சிய குத்­தகைக் காலம் 89 ஆண்­டு­கள், ஐந்து மாதங்­கள்.

ஆக அதிக விலைக்கு விற்­கப்­பட்ட இரண்­டா­வது வீவக வீடு இது. கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதம் பினக்­கல்@டக்ஸ்­ட­னில் ஐந்­தறை வீடு ஒன்று $1.258 மில்லி யனுக்கு விற்கப்­பட்­டு ஆக அதிக விலைபோன மறு­விற்­பனை வீடு என்­னும் சாத­னை­யைப் பெற்­றிருந்­தது.

தனி­யார் வீட்டு விலை­கள் தொடர்ந்து அதி­க­ரித்து வரு­வ­தன் கார­ண­மாக $1 மில்­லி­யன் வீவக வீடு­க­ளுக்­கான தேவை இன்­னும் வலு­வ­டை­யும் என்று தாம் எதிர்­பார்ப்­ப­தாக 'ஆரஞ்­சுடீ அண்ட் டை' என்­னும் சொத்­துச் சந்தை ஆராய்ச்சி மற்­றும் பகுப்­பாய்வு நிறு­வ­னத்­தின் அதிகாரி திருவாட்டி கிறிஸ்­டின் சன் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!