ஜூலை நடுப்பகுதியிலிருந்து அதிகபட்சம் ஐவர் கொண்ட குழுக்களாக சேர்ந்து உண்ண அனுமதி

உணவு, பானக் கடை­களில் இப்­போது அதி­க­பட்­சம் இரு­வர் மட்­டுமே குழு­வா­கச் சேர்ந்து உண்ண அனு­ம­திக்­கப்­படும் நிலை­யில், அவ்­வ­ரம்பு ஜூலை மாத நடுப்­ப­கு­தி­யில் இருந்து ஐவ­ராக உயர்த்­தப்­படும்.

கொவிட்-19 தடுப்­பூசி நட­வ­டிக்­கை­யும் தொற்று அபா­யம் அதி­க­முள்ள பணி­யி­டங்­களில் அவ்­வப்­போ­தைய கட்­டா­யப் பரி­சோ­த­னை­யும் முடுக்­கி­வி­டப்­ப­ட இருப்பதை அடுத்து, இந்த வரம்பு அதி­க­ரிப்பு இடம்­பெறும் என்று நிதி­ய­மைச்­சர் லாரன்ஸ் வோங் தெரி­வித்து இருக்­கி­றார்.

"திட்­ட­மிட்­ட­படி தடுப்­பூசி நட­வடிக்­கை­கள் இடம்­பெற்­று வரு­வதா­லும் தொற்று அபா­யம் அதி­க­முள்ள இடங்­களில் பணி­பு­ரி­வோர்க்­கான அவ்­வப்­போ­தைய கொரோனா பரி­சோ­த­னை­யா­லும் அந்த நிலையை நாம் அடைய வேண்­டும்," என்று நேற்­றைய மெய்­நி­கர் செய்­தி­யா­ளர் சந்­திப்­பின்­போது திரு வோங் கூறி­னார்.

எந்­தத் தேதி­யில் இருந்து அது தொடங்­கும் என்­பது குறித்து முன்­கூட்­டியே அறி­விக்­கப்­படும் என்­றும் அவர் சொன்­னார்.

கடு­மை­யான கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக கிட்­டத்­தட்ட ஒரு மாதத்­திற்­கும் மேலாக உணவு, பானக் கடை­களில் அமர்ந்து உண்­ணத் தடை விதிக்­கப்­பட்­டது. இந்­நி­லை­யில், கடந்த திங்­கட்­கி­ழ­மை­யில் இருந்து அதி­க­பட்­சம் இரு­வர் கொண்ட குழு­வாக உணவு, பானக் கடை­களில் அமர்ந்து உண்ண அனு­ம­திக்­கப்­பட்டு வரு­கிறது.

ஜூலை நடுப்­ப­கு­தி­யில் இருந்து உணவு, பானக் கடை­கள், உடற்­பயிற்­சிக்­கூ­டங்­கள், உடற்­த­குதி நிலை­யங்­கள் போன்ற தொற்று அபா­யம் அதி­க­முள்ள சூழல்­களில் பணி­புரி­வோர் அவ்­வப்­போது விரை­வான, எளி­தான பரி­சோ­தனை (எஃப்இடி) செய்­து­கொள்ள வேண்­டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!