சிறுவர்களுக்கு தடுப்பூசி: தள்ளிவைக்க மருத்துவர்கள் கடிதம்

அமெ­ரிக்­கா­வில் தடுப்­பூசி போடப்பட்ட 13 வயது சிறு­வன் உயி­ரி­ழந்­த­தைத் தொடர்ந்து, 200,000 பள்ளி மாண­வர்­க­ளுக்­கான தடுப்­பூசி இயக்­கத்தைத் தள்ளி வைக்குமாறு இங்­குள்ள சில மருத்­து­வர்­களும் இத­ய­நோய் நிபு­ணர்­களும் கொவிட்-19 தடுப்­பூசி நிபு­ணர் குழு­வி­டம் முறை­யீடு செய்­துள்­ள­னர்.

மிச்­சி­க­னில் உள்ள சாகி­னாவ் கவுண்­டி­யைச் சேர்ந்த அச்­சி­று­வன், இரண்­டா­வது தடுப்­பூசி போடப்­பட்ட மூன்று நாட்­க­ளுக்­குப் பிறகு இறந்­து­விட்­ட­தாக அமெ­ரிக்க ஊட­கங்­கள் சென்ற வியா­ழக்­கி­ழமை கூறின. எனி­னும், சிறு­வ­னுக்­குப் போட்­டப்­பட்ட தடுப்­பூசி குறித்த விவ­ரங்­கள் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.

தடுப்­பூ­சிக்­கும் சிறு­வ­னின் மர­ணத்­திற்­கும் தொடர்பு உள்­ளதா என்று அமெ­ரிக்க நோய் கட்­டுப்­பாடு, தடுப்பு மையம் (சிடிசி) விசா­ரித்து வரு­வ­தாக சாகி­னாவ் கவுண்டி சுகா­தா­ரத் துறை தெரி­வித்­துள்­ளது.

நிபு­ணர் குழு­வின் தலை­வர் பேரா­சி­ரி­யர் பெஞ்­ச­மின் ஓங்­கிற்கு இத­ய­நோய் நிபு­ணர் டாக்­டர் கோ குவாங் போ கடந்த சனிக்­கி­ழமை தமது ஃபேஸ்புக்­கில் திறந்த கடி­தத்தை எழு­தி­யுள்­ளார்.

சிடி­சி­யும் உல­கெங்­கி­லும் உள்ள பிற நிறு­வ­னங்­களும் இந்த சம்­ப­வம் தொடர்­பாக மிக­வும் வலு­வான, உறு­தி­யான தர­வு­க­ளைத் தரும் வரை­யில் சிங்­கப்­பூ­ரின் தடுப்­பூசி இயக்­கத்தை சிறிது காலத்­துக்­குத் தள்ளி வைக்க வேண்­டும் என்று அவர் கேட்­டுக்­கொண்­டார்.

"இதில் சம­யோ­சி­த­மாக சிந்­தித்து இளை­யர்­க­ளுக்கு கொவிட்-19 தடுப்­பூ­சி­க­ளால் ஏற்­ப­டக்­கூ­டிய அபா­ய­க­ர­மான விளை­வு­கள் குறித்து விசா­ரிக்­க­வும் உயர் தர­மான தர­வு­களை வழங்க அமைப்­பு­க­ளுக்கு அதிக நேரம் கொடுக்க முடி­யுமா?" என்று அக்­க­டி­தம் கேட்­டுக்­கொண்­டது.

இக்­க­டி­தத்­தில், டாக்­டர் கோவு­டன் மேலும் பல மருத்­து­வர்­களும் இத­ய­நோய் சிகிச்சை நிபு­ணர்­களும் கையெ­ழுத்­திட்­டுள்­ள­னர்.

கடி­தத்­தில் உள்ள பரிந்­து­ரை­களை பரி­சீ­லிக்­கப்­ப­டுமா என்று சுகா­தார அமைச்­சி­டம் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்­ட­போது, ​​தடுப்­பூசி திட்­டங்­களில் எந்த மாற்­ற­மும் இல்லை என்று அமைச்சு பதி­ல­ளித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!