கட்டுப்பாடு கடுமையாக்கப்பட்ட பின்னர் இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வர 11 பேருக்கு விதிவிலக்கு: ஈஸ்வரன் தகவல்

எல்­லைக் கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­கள் கடந்த ஏப்­ரல் 24ஆம் தேதி கடு­மை­யாக்­கப்­பட்ட பின்­னர் இந்­தி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்­குள் நுழைய 11 பேர் விதி­வி­லக்கு பெற்­றி­ருப்­ப­தா­க­வும் அவர்­களில் எவ­ரும் சிங்­கப்­பூர் குடி­மக்­கள் அல்­லது நிரந்­த­ர­வா­சி­கள் அல்­லர் என்­றும் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ் ஈஸ்­வ­ரன் நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­துள்­ளார்.

சிங்­கப்­பூர் குடி­மக்­கள் அல்­லது நிரந்­த­ர­வா­சி­க­ளைச் சார்ந்­தி­ருப்­பது உள்­ளிட்ட விதி­வி­லக்­கான சூழ்­

நி­லை­களில் மேல்­மு­றை­யீட்­டின் அடிப்­ப­டை­யில் அவர்­கள் உள்ளே நுழைய அனு­மதி அளிக்­கப்­பட்­ட­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

"கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­னர், அதா­வது மார்ச் 1 முதல் ஏப்­ரல் 23 வரை இந்­தி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூர்­வா­சி­ கள் அல்­லாத 9,040 பேர் இங்கு வர அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். இவர்­களில் 93 விழுக்­காட்­டி­னர், அதா­வது 8,404 பேர் நீண்­ட­கால வருகை அட்டை வைத்­தி­ருப்­ப­வர்­கள்.

"இவர்­களில் பெரும்­பா­லா­னோர் கட்­டு­மா­னம், கடல்­துறை கப்­பல்­

த­ளம் மற்­றும் உற்­பத்­தித்­து­றை­க­ளைச் சேர்ந்து ஒர்க் பெர்­மிட் ஊழி­யர்­கள். முக்­கி­யத்­து­வம் வாய்ந்த உத்­தி­பூர்­வத் திட்­டங்­க­ளுக்­கும் உள்­கட்­ட­மைப்­புப் பணி­க­ளுக்­கும் உதவ அவர்­கள் இங்கு வந்­தார்­கள்.

"எஞ்­சிய 737 பேர் குறு­கி­ய­கால வருகை அட்டை வைத்­தி­ருப்­ப­வர்­கள்," என்று திரு ஈஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

பாட்­டா­ளிக் கட்­சி­யைச் சேர்ந்த ஹவ்காங் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டெனிஸ் டான் எழுப்­பிய வினா­வுக்கு திரு ஈஸ்­வ­ரன் எழுத்­து­பூர்­வ­மாக அளித்த பதி­லில் இந்த விவ­ரங்­கள் குறிப்­பி­டப்­பட்டு உள்­ளன.

ஏப்­ரல் 22ஆம் தேதி அப்­போ­தைய கல்வி அமைச்­சர் லாரன்ஸ் வோங் ஓர் அறி­விப்பை வெளி­யிட்­டார்.

இரு­வார காலத்­தில் இந்­தி­யா­வுக்­குச் சென்ற நீண்­ட­கால, குறு­கி­ய­கால வருகை அட்­டை­தா­ரர்­கள் ஏப்­ரல் 23 இரவு 11.59 மணி முதல் சிங்­கப்­பூ­ருக்­குள் நுழைய அனு

­ம­திக்­கப்­படமாட்­டார்­கள் என்­பது அந்த அறி­விப்பு. இந்த நட­வ­டிக்­கை­யால் பாதிக்­கப்­பட்­ட­டோ­ரில் சிலர் சிங்­கப்­பூ­ருக்­குள் வர அனு­மதி பெற்­றி­ருந்­தும் ஏப்­ரல் 24க்குள் பய­ணம் செய்­யத் தவ­றி­ய­வர்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!