பேருந்து ஓட்டுநரை திட்டினார், தாக்கினார்; ஆடவருக்கு தண்டனை

நட­ரா­ஜன் மாரி­சூசே, 40, என்ற மலே­சி­யர் சென்ற ஆண்டு ஜூலை 31ஆம் தேதி அங் மோ கியோ அவென்யூ 6ல் சேவை எண் 130 பேருந்­தில் ஏறி­னார். அப்­போது மணி இரவு சுமார் 7.50 இருக்­கும்.

நட­ரா­ஜன் முகக்­க­வ­சம் அணிந்து இருந்­தார். இருந்­தா­லும் முகக்­கவசத்­தைக் கீழே இறக்­கி­விட்­டுக்­கொண்டு தன் மனை­வி­யு­டன் கைபேசி­யில் பேசி­ய­ப­டியே பேருந்­தில் அவர் ஏறி­னார்.

இதைப் பார்த்த பேருந்து ஓட்டு­நரான திரு சுலை­மான் ஜுனாடி, முகக்­க­வ­சத்தை முறை­யாக அணி­யும்­படி நட­ரா­ஜ­னி­டம் கூறி­னார்.

அதைக் கேட்டு முகக்­க­வ­சத்தைச் சரி­யாக போட்­டுக்­கொண்ட நட­ரா­ஜன், பேருந்­தின் பின் பக்­கம் சென்று ஓர் இருக்­கை­யில் அமர்ந்­தார். இருந்­தா­லும் நட­ரா­ஜன் முகக்­க­வ­சத்தை மறு­ப­டி­யும் கீழே இறக்­கி­விட்டு இருந்­ததைப் பேருந்து ஓட்­டு­நர் பார்த்­தார்.

வழி­யில் பேருந்து நிறுத்­தம் ஒன்றில் பேருந்தை நிறுத்­திய ஓட்டு­நர், பின் பக்­கம் திரும்பி நட­ரா­ஜனைப் பார்த்து முகக்­க­வ­சத்தை முறை­யாக அணி­யும்­படி மீண்­டும் கூறி­னார்.

சிங்­கப்­பூர் சட்­டப்­படி முகக்­க­வ­சத்தை முறை­யாக அணி­ய­வேண்டும் என்­பதை அவர் நட­ரா­ஜ­னி­டம் எடுத்­துக் கூறி­னார். அப்­போது மணி இரவு 7.58 இருக்­கும்.

அதற்கு ஒரு நிமி­டம் கழித்து பேருந்து சென்று கொண்டு இருந்­த­போது நட­ரா­ஜன் ஓட்­டு­நரை நோக்கி நடந்து வந்து ஓட்­டு­நரைக் கெட்ட வார்த்­தை­க­ளைச் சொல்லி திட்­டி­னார். ஓட்­டு­நரை அவ­ரின் இடது தோள்­பட்­டை­யில் தாக்­கி­விட்டு பேருந்­தில் இருந்து நட­ரா­ஜன் இறங்­கிச் சென்­று­விட்­டார்.

அந்­தச் சம்­ப­வத்­திற்­குப் பிறகு தொடர்ந்து பேருந்தை ஓட்­டிச் செல்ல தன்­னால் இய­லாது என்று உணர்ந்த ஓட்­டு­நர் திரு சுலை­மான், எஸ்­பி­எஸ் அலு­வ­ல­கத்­திற்கு அது பற்றி தக­வல் தெரி­வித்­தார். பிறகு போலி­சிடம் புகார் தாக்கலானது.

அலைக்­க­ழித்­தது, தாக்­கி­யது ஆகிய குற்­றங்­களை நட­ரா­ஜன் ஒப்­புக்­கொண்­டார். கொவிட்-19 சட்­டத்தை மீறி­ய­தா­க­வும் ஒப்­புக்­கொண்ட நட­ரா­ஜன், தன் மீது கருணை காட்­டும்­படி நீதி­மன்­றத்தைக் கேட்­டுக்­கொண்­டார்.

ஒரு­வரை தாக்­கிய குற்­றத்­திற்கு மூன்­றாண்டு வரை சிறை, $5,000 வரை அப­ரா­தம் விதிக்க முடி­யும். கொவிட்-19 (தற்­கா­லிக நட­வ­டிக்­கை­கள்) சட்­டத்தை மீறு­வோ­ருக்கு ஆறு மாதம் வரை சிறை, $10,000 வரை அப­ரா­தம் விதிக்க முடி­யும்.

நட­ரா­ஜ­னுக்கு இரண்டு வாரம் சிறைத்­தண்­டனை, $4,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது. அப­ரா­தத்­தைச் செலுத்­த­வில்லை என்­றால் அவர் கூடு­த­லாக எட்டு நாட்­கள் சிறை­யில் இருக்க வேண்­டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!