தலைமை தகவல் அதிகாரிக்கு அபராதம், வாகனம் ஓட்ட தடை

வர்த்­தக, தொழில் அமைச்­சில் தலைமை தக­வல் அதி­கா­ரி­யான பெர்­னர்ட் டோனல்ட் மிரண்டா என்­ப­வர் மது­பா­னம் அருந்­தி­விட்டு வாக­னம் ஓட்­டிய குற்­றத்­துக்­காக அவருக்கு $2,000 அப­ரா­த­மும் ஈராண்­டு­க­ளுக்கு அனைத்து வகை­யான வாக­னங்­களும் ஓட்ட தடை­யும் தண்­ட­னை­யாக விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இவர் தமது சகோ­த­ர­ரின் வீட்டு இரவு விருந்­தின்­போது கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதி­யன்று ஒயின் அருந்­தி­யதை நீதி­மன்­றத்­தில் ஒப்­புக்­கொண்­டார்.

திரு பெர்­னர்ட் செம்­ப­வாங்­கில் உள்ள தமது வீடு நோக்கி இரவு சுமார் 9.00 மணிக்கு கார் ஓட்­டிச் சென்­ற­போது பிடி­பட்­ட­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டுது.

அவ­ரு­டைய சுவா­சக் காற்ைற சோதித்­துப் பார்த்­த­போது அதில் 100 மில்லி சுவா­சக் காற்­றில் 43 எம்­சிஜி அளவு மது­பா­னம் இருந்­தது தெரி­ய­வந்­தது.

100 மில்லி சுவா­சக் காற்­றில் அனு­ம­திக்­கப்ட்ட மது­பான அளவு 35 எம்­சிஜி மட்­டுமே என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

நீதி­மன்­றத்­தில் கருணை காட்­டும்­படி கோரிய திரு பெர்­னர்ட், இந்­தச் சம்­ப­வம் தமது இயற்கை குணத்­துக்கு மாறா­னது என்­றும், தான் தவறு செய்­து­விட்­ட­தா­க­வும் இது­போல் இனி நடக்­காது என்­றும் தெரி­வித்­தார்.

அந்த சம்­ப­வத்­திற்கு பிறகு தமது காரை தான் விற்­று­விட்­ட­தா­க­வும் தாம் தற்­பொ­ழுது வாக­னம் ஓட்­டு­வ­தில்லை என­வும் விளக்­கி­னார்.

இவர் வர்த்­தக, தொழில் அமைச்­சில் சேரும் முன் சிங்­கப்­பூர் கடற்­ப­டை­யில் ரியர் அட்­மி­ர­லா­கப் பதவி வகித்­தார் என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்­தி­ரிகை தெரி­வித்­துள்­ளது.

பின்­னர் திரு பெர்­னர்ட் எஸ் ராஜ­ரத்­தி­னம் கல்­விக் கழ­கத்­தின் கடற்­துறை பாது­காப்­புத் திட்­டத்­தில் மூத்த கல்­வி­யா­ள­ரா­கப் பதவி வகித்­தார் என்­றும் தெரி­விக்­கப்­படு­கிறது.

தற்­பொ­ழுது இவர் அங்கு இல்லை என்­றும் விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!