சமூகத்தொற்றால் கேடிவி குழுமம் உருவாகி இருக்கலாம்

மருத்துவ சேவைகள் இயக்குநர்

கென்னத் மாக் கருத்து

கேடிவி கொவிட்-19 தொற்­றுக் குழு­மம் உரு­வா­ன­தற்கு சமூ­கப் பர­வல் கார­ண­மாக இருக்­கக்­

கூ­டும் என்று சிங்­கப்­பூ­ரின் மருத்­துவ சேவை­கள் இயக்­கு­நர் கென்­னத் மாக் தெரி­வித்­தள்­ளார்.

தொடக்­கத்­தில் தொற்று உறுதி செய்­யப்­பட்ட வியட்­னா­மி­யப் பெண் இந்­தத் தொற்­றுக் குழு­மத்­தில் முதன்­மு­த­லா­கப் பாதிக்­கப்­பட்­ட­வர் இல்லை என்று கரு­தப்­ப­ட­லாம் என்று நேற்று அவர் கூறி­னார். எந்த வகை­யில் இந்­தக் குழு­மம் உரு­வா­னது என்­பது இன்­னும் தெரி­யாத நிலை­யில் உள்­ளது என்­றார் திரு மாக்.

இதற்­கி­டையே, கேடிவி தொற்­றுக் குழு­மத்­தில் பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை நேற்று 120ஐ தொட்ட நிலை­யில் அந்­தப் பெண் இன்­னும் தனி­மை­யில் வைக்­கப்­பட்­டுள்­ள­தாக கொவிட்-19 தொடர்­பான அமைச்­சு­கள் நிலை பணிக்­குழு கூறி­யுள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் உள்ள காத­ல­னின் பொறுப்­பா­த­ர­வில் குறு­கி­ய­கால வரு­கை­யா­ளர் அட்­டை­யில் வியட்­னா­மி­லி­ருந்து கடந்த பிப்­ர­வ­ரி­யில் அப்­பெண் இங்கு வந்­தார். அப்­போது வியட்­னாம் தொற்று குறைந்த நாடாக இருந்­த­தால் வியட்­னா­மி­யப் பய­ணி­க­ளுக்­காக சிங்­கப்­பூர் தனது எல்­லை­யைத் திறந்­து­விட்­டது.

குடும்ப கார­ணங்­க­ளுக்­காக குறு­கிய கால வருகை அட்டை அளிக்­கப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூ­ருக்­குள் நுழை­வோர் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து கிரு­மித்­தொற்றை கொண்டு வந்­து­வி­டக்­கூ­டாது என்­ப­தற்­காக அவர்­க­ளி­டம் பரி­சோ­தனை நடத்­தப்­ப­டு­கிறது என்று பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரும் நிதி அமைச்­ச­ரு­மான லாரன்ஸ் வோங் கூறி­னார்.

ஜூலை 11ஆம் தேதி வியட்­னா­மிப் பெண் கடு­மை­யான மூச்சுத்தி­ண­றல் கார­ண­மாக மருத்­து­வரை நாடி­னார். அப்­போது அவ­ரி­டம் கொவிட்-19 தொற்று உறுதி செய்­யப்­பட்டு உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார்.

கேடிவி கூடங்­க­ளுக்கு அந்­தப் பெண் அடிக்­கடி சென்று வந்­தது தொடர்பு தட­ம­றி­தல் மூல­மும் விசா­ரணை மூல­மும் தெரிய வந்­தது.

"இங்­குள்ள கிரு­மித்­தொற்று எண்­ணிக்­கையை அதி­க­ரிக்­கும் வகை­யில் புதிய தொற்­றுக் குழு­மம் மூலம் ஏற்­பட்­டி­ருக்­கும் பின்­ன­டை­வால் நம்­பிக்­கைக் குலைவு ஏற்­பட்­டுள்­ளது," என்­றார் திரு வோங்.

இது­போன்ற வரு­கை­யா­ளர்­க­ளுக்கு குடி­நு­ழைவு சோத­னைச் சாவடி ஆணை­யத்­தி­டம் முறை­யாக தக­வல் கொடுக்­காத உள்­ளூர் பொறுப்­பா­த­ர­வா­ளர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றார் அவர்.

குறு­கி­ய­கால வரு­கை­யா­ளர்­கள் சிங்­கப்­பூ­ரில் எந்­த­வொரு வேலை­யைச் செய்­யவோ தொழில் நடத்­தவோ அனு­மதி இல்லை. தடையை மீறு­வோ­ரின் வரு­கை­யா­ளர் அட்டை பறிக்­கப்­பட்டு அவர்­க­ளின் நாட்­டுக்­குத் திருப்பி அனுப்­பப்­ப­டு­வ­தோடு மீண்­டும் அவர்­கள் சிங்­கப்­பூர் வரத் தடை விதிக்க சட்­டம் வகை செய்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!