கட்டுக்குள் கேடிவி குழுமம்

கேடிவி கிரு­மித்­தொற்­றுக் குழு­மம் கட்­டுக்­குள் வந்­துள்­ளது என்­றும் கடந்த மூன்று நாள்­க­ளாக அந்தக் கு­ழு­மத்­தில் ஒற்றை இலக்­கத்­திலேயே புதிய பாதிப்­பு­கள் பதி­வா­கி­ன என்­றும் சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் கூறியுள்ளார்.

நேற்று முன்­தின நில­வ­ரப்­படி, அக்­கு­ழு­மத்­தில் மொத்­தம் 237 பேர் கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்­டு­விட்­ட­னர்.

கேடிவி குழு­மத்­தில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் தங்­க­ளுக்­கான மருத்­து­வச் செலவு­களை முழு­மை­யா­கச் செலுத்­தச் செய்­யும்­படி அர­சாங்­கம் பரி­சீ­லிக்­குமா என்று ஜூரோங் குழுத்­தொகுதி எம்.பி. ஸி யாவ் குவான் கேட்­டார்.

அதற்கு, "கேடிவி கிரு­மித்­தொற்­றுக் குழு­மத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளின் பொறுப்­பற்ற நடத்­தை­யால் நாம் அனை­வ­ரும் கவலை அடைந்­துள்­ளோம். ஆனா­லும், ஒவ்­வொ­ரு­வர்க்­கும் தேவை­யான மருத்­து­வப் பரா­ம­ரிப்பு கிடைப்­பதை உறு­தி­செய்­வது நமது பொறுப்பு," என்று கொவிட்-19 தொற்­றுக்கெதி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரு­மான திரு ஓங் பதி­ல்­ கூறினார்.

கேடிவி கிரு­மித்­தொற்­றுக் குழு­மம் கண்­ட­றி­யப்­ப­டு­முன், அதா­வது ஜூலை 12ஆம் தேதிக்­கு­முன், படிப்­படி­யான தளர்­வு­களை நோக்கி நாடு சென்­று­கொண்­டி­ருந்­தது என்­றும் ஆனால் கேடிவி குழு­மம் எதிர்­பாராத ஒரு தடைக்­கல்­லாக அமைந்து­விட்­டது என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

துர­திர்ஷ்­ட­வ­ச­மாக, அடுத்த, பெரிய கிரு­மித்­தொற்­றுக் குழு­ம­மாக ஜூரோங் மீன்­பி­டித் துறை­முகம் உரு­வெ­டுத்­ததை அடுத்து, நிலை­மையை மாற்­றி­விட்­ட­தாக திரு ஓங் கூறி­னார்.

அக்­கு­ழு­மத்­தில் நேற்று முன்­தினம்­வரை 792 பேர் பாதிக்­கப்­பட்டு­விட்­ட­னர். அதுவே, கட்­டுப்­பா­டு­களை மேலும் கடு­மை­யாக்­கச் செய்து, கடந்த வியா­ழக்­கி­ழமை முதல் இரண்­டாம் கட்ட (அதி­க­ரிக்­கப்­பட்ட விழிப்­பு­நிலை) நட­வடிக்­கை­களை நடை­மு­றைப்­ப­டுத்த வித்­திட்­ட­தாக அவர் சொன்­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!