கொவிட்-19: நாடுகள், வட்டாரங்களுக்கான சிங்கப்பூரின் நால்வகை எல்லை நடைமுறைகள்

கொவிட்-19 அபா­யம் அடிப்­ப­டை­யில் நாடு­க­ளை­யும் வட்­டா­ரங்­க­ளை­யும் சிங்­கப்­பூர் நான்கு வகை­க­ளா­கப் பிரித்து அவற்­றுக்கு வெவ்­வேறு எல்லை சார்ந்த நடை­மு­றை­க­ளைக் கையா­ள­வுள்­ளது. அதன்­படி, வகை ஒன்று முதல் வகை நான்கு வரை­யி­லான நாடு­க­ளின் கொவிட்-19 நில­வ­ரத்தை நாம் அறிந்­து­கொள்­ள­லாம். அத்­து­டன் 'விடி­எல்' எனப்­படும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான பய­ணப் பாதை' திட்­டத்­தின்­கீழ் ஜெர்­மனி, புருணை ஆகிய நாடு­க­ளுக்­கும் எத்­த­கைய நடை­மு­றை­கள் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளன என்­ப­தைப் பார்ப்­போம்.

'விடி­எல்' - ஜெர்­மனி

ஜெர்­மனி செல்ல விரும்­பு­வோர், அங்­குள்ள கட்­டுப்­பா­டு­க­ளை­யும் சரி­பார்த்த பின்­னர் பயண ஏற்­பாடு­களை உறு­தி­செய்­திட வேண்­டும். சிங்­கப்­பூ­ருக்கு 'விடி­எல்' விமா­னத்­தில் திரும்­பு­வ­தை­யும் அவர்­கள் உறு­தி­செய்ய வேண்­டும்.

சிங்­கப்­பூர் வரு­வ­தற்­கு­முன் 21 நாட்­க­ளாக ஜெர்­மனி அல்­லது சிங்­கப்­பூ­ரில் மட்­டுமே பயணி இருந்­தி­ருக்க வேண்­டும்.

மேலும், முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டி­ருக்க வேண்­டும். விமா­னப் பய­ணத்­திற்கு 48 மணி நேரத்­துக்கு முன் கொவிட்-19 'பிசி­ஆர்' பரி­சோ­த­னை­யைச் செய்­து­கொள்ள வேண்­டும்.

வந்­த­டைந்­த­தும் செய்­து­கொள்­ள­வி­ருக்­கும் கொவிட்-19 'பிசி­ஆர்' பரி­சோ­த­னைக்­காக முன்­ன­தா­கவே பதிவு செய்து அதற்­குக் கட்­ட­ணத்­தை­யும் செலுத்தி இருக்க வேண்­டும்.

விமான நிலை­யத்­தில் கடப்­பி­த­ழு­டன் தடுப்­பூசி போட்­ட­தற்­கான சான்­றி­தழ் மற்­றும் கொவிட்-19 தொற்று இல்லை என்று உறு­திப்­படுத்­தும் கொவிட்-19 'பிசி­ஆர்' பரி­சோ­தனை முடி­வைக் காட்ட வேண்­டும்.

சிங்­கப்­பூர் திரும்­பி­ய­தும் விமான நிலை­யத்­தில் கொவிட்-19 'பிசி­ஆர்' பரி­சோ­த­னை­யைச் செய்­து­கொண்டு உடனே தனி­யார் போக்­கு­வ­ரத்து வழி தனிமை வளா­கத்­திற்­குச் சென்று­விட வேண்­டும்.

பரி­சோ­தனை முடிவு கிரு­மித்­தொற்று இல்லை என்று உறு­தி­செய்­யும்­வரை தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும். பின்­னர், குறிப்­பிட்ட சில மருந்­த­கங்­களில் கொவிட்-19 'பிசி­ஆர்' பரி­சோ­தனை செய்­து­கொள்­வ­தற்கு மூன்­றாம் மற்­றும் ஏழாம் நாளில் பதிவு செய்­திட வேண்­டும்.

நாடு­க­ளின் பட்­டி­யல்

ஹாங்­காங், மக்­காவ், சீனா, நியூ­சி­லாந்து, தைவான் ஆகி­யவை வகை ஒன்­றின்­கீழ் அமைந்­துள்ள நாடு­கள். ஆஸ்­தி­ரே­லியா, புருணை, கனடா, ஜெர்­மனி ஆகி­யவை வகை இரண்டு நாடு­க­ளா­கும். வகை மூன்­றின்­கீழ் ஆஸ்ட்­ரியா, பெல்­ஜி­யம், டென்­மார்க், இத்­தாலி, ஜப்­பான், லக்­ஸம்­பர்க், நார்வே, தென்­கொரியா, சுவிட்­சர்­லாந்து ஆகி­யவை அடங்­கும். எஞ்­சிய மற்ற நாடு­கள் அனைத்­தும் வகை நான்­கின்­கீழ் இருக்­கும்.

'பிசி­ஆர்' பரி­சோ­தனை

வகை ஒன்று, இரண்­டின்­கீழ் உள்ள நாடு­க­ளுக்கு பய­ணம் மேற்­கொள்­வ­தற்கு முன்­பாக கொவிட்-19 'பிசி­ஆர்' பரி­சோ­தனை தேவைப்­படாது. இருப்­பி­னும், சிங்­கப்­பூர் வந்­த­தும் விமான நிலை­யத்­தில் அப்­ப­ரி­சோ­தனை செய்­யப்­படும்.

தனிமை உத்­த­ரவு

வகை ஒன்­றின்­கீழ் உள்ள நாடு­கள், 'விடி­எல்' திட்­டத்­தின்­கீழ் இணைந்த நாடு­கள் இரண்­டுக்­கும் தனிமை உத்­த­ரவு இருக்­காது. எஞ்­சிய நாடு­கள் அனைத்­துக்­கும் தனிமை உத்­த­ரவு இருக்­கும்.

குறு­கி­ய­கால வரு­கை­யா­ளர்­கள்

வகை ஒன்று மற்­றும் 'விடி­எல்' திட்­டத்­தின்­கீழ் உள்ள நாடு­க­ளி­லிருந்து மட்­டுமே குறு­கி­ய­கால வரு­கை­யா­ளர்­கள் அனு­ம­திக்­கப்­படு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!