ஆதரவுத் திட்டங்களுக்குப் போதிய மனிதவளம் இருப்பதை உறுதிப்படுத்த வலியுறுத்து

கொவிட்-19 ஆத­ர­வுத் திட்­டங்­களைச் செயல்­ப­டுத்­தும் பணி­யில் போதிய மனி­த­வ­ள­மும் இதர வளங்­களும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வதை அர­சாங்­கம் உறு­திப்­ப­டுத்த வேண்­டும் என்று நாடா­ளு­மன்­றக் குழு வலி­யு­றுத்தி இருக்­கிறது.

நிதிச் சவால்­க­ளைச் சமா­ளிக்­க­வும் செல­வி­னங்­கள் எதிர்­கா­லத்­தில் தாக்­குப்­பி­டிக்­கும் வகை­யில் இருப்­ப­தற்­காக பொருத்­த­மில்­லாத் திட்­டங்­களை நிறுத்­த­வும் ஏது­வாக ஆத­ர­வுத் திட்­டங்­கள் குறித்து அர­சாங்­கம் அவ்­வப்­போது மறு­ஆய்வு செய்ய வேண்­டும் என்று அக்­குழு கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

அர­சாங்­கத்­தின் செல­வி­னங்­களை ஆய்வு செய்­வ­தற்­காக நாடா­ளு­மன்­றத்­தால் அமைக்­கப்­பட்ட எட்டு எம்.பி.க்கள் அடங்­கிய மதிப்­பீட்­டுக் குழு 93 பக்க அறிக்­கை­யைத் தாக்­கல் செய்­தது. அந்த அறிக்­கை­யில் மேற்­கண்ட பரிந்­து­ரை­கள் இடம்­பெற்­றுள்­ளன.

வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி எம்.பி. ஆங் வெய் நெங் தலை­மை­யி­லான அக்­கு­ழு­வில் மக்­கள் செயல் கட்சி எம்.பி.க்கள் எழு­வ­ரும் செங்­காங் குழுத்­தொகுதி பாட்­டா­ளிக் கட்சி எம்.பி. டாக்­டர் ஜேமஸ் லிம்­மும் இடம்­பெற்­றுள்­ள­னர்.

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­பிற்­கான நிதிச் சுமையை நிர்­வ­கிப்­பது தொடர்­பான முயற்­சி­களை வழி­நடத்தும் விதமாக ஒரு வழி­ந­டத்து அமைச்சை நிய­மிக்­க­வும் அக்­குழு பரிந்­துரை செய்­துள்­ளது.

தனது அறிக்­கை­யைத் தயா­ரிக்க, 2020, 2021 ஆண்­டு­க­ளின் வரு­டாந்­திர வர­வு­செ­ல­வுத் திட்ட அறிக்­கை­க­ளை­யும் கடந்த ஆண்டு தாக்­கல் செய்­யப்­பட்ட ஐந்து வரவு­செ­ல­வுத் திட்ட அறிக்­கை­க­ளை­யும் அக்­குழு கருத்­தில்­கொண்­டது.

சுகா­தா­ரம், முது­மைக்­கா­லப் பரா­ம­ரிப்­பிற்­கா­கச் செல­வு­கள் தொடர்ந்து உய­ரும் எனக் குறிப்­பிட்ட குழு, அதைச் சமா­ளிக்க ஏது­வாக, சிங்­கப்­பூ­ரர்­கள் ஆரோக்­கி­ய­மான வாழ்க்­கை­மு­றை­யைக் கடைப்­பி­டிக்க ஊக்­கு­விக்­கும் முயற்­சி­களை அர­சாங்­கம் தொடர்ந்து ஆராய வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

தேசிய அள­வி­லான சுகா­தாரத் திட்­டங்­களில் சிங்­கப்­பூ­ரர்­கள் பங்­கெ­டுக்­கும் விதமாக, ஓர் ஆத­ர­வான வேலைச் சூழ­லைப் பொது, தனி­யார் துறை நிறு­வ­னங்­கள் ஏற்­ப­டுத்­தித் தர வேண்­டும் என்­றும் அக்­குழு ஆலோ­சனை கூறி­ இருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!