நான்கு தடுப்பூசி நிலையங்கள் மூடப்படும்

கொவிட்-19 தடுப்­பூ­சி­யைப் போட்டு வரும் 37 தடுப்­பூசி நிலை­யங்­களில் நான்கு நிலை­யங்­கள் இம்­மாத இறு­தி­யில் மூடப்­படும். தடுப்­பூசி போடப்­பட்ட விகி­தம் சிங்­கப்­பூ­ரில் அதி­க­ரித்து வரும் நிலை­யில், தடுப்­பூசி நிலை­யங்­களும் அதற்­கேற்­றாற்­போ­டல மூடப்­படும் என்­றார் சுகா­தார மூத்த துணை அமைச்­சர் ஜனில் புதுச்­சேரி.

இருப்­பி­னும், தடுப்­பூ­சியை வழங்­கும் பொதுச் சுகா­தார தயார்­நிலை மருந்­த­கங்­க­ளின் (பிஎச்­பிசி) எண்­ணிக்­கை­யும் அதி­க­ரிக்­கப்­படும் என்று அவர் சொன்னார். தற்­போது தடுப்­பூ­சியை வழங்­கும் மருந்­த­கங்­களின் எண்­ணிக்கை 79.

இது அக்­டோ­பர் இறு­திக்­குள் கிட்­டத்­தட்ட 100க்கும் மேலாக அதி­க­ரிக்­கப்­படும் என்­றார் டாக்­டர் ஜனில்.

தடுப்­பூசி நிலை­யம் அல்­லது 'பிஎச்­பிசி'க்குச் சென்று தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள முடி­யாத நிலை­யில் இருப்­ப­வர்­க­ளுக்­காக அர­சாங்­கத்­தின் நட­மா­டும் மற்­றும் இல்­லத் தடுப்­பூ­சிக் குழுக்­கள் இயங்கி வரு­வ­தை­யும் அமைச்­சர் சுட்­டி­னார். சிங்­கப்­பூ­ரின் கொவிட்-19 நில­வரம், தடுப்­பூசி மற்­றும் வர்த்­த­கங்­க­ளின் திறப்பு தொடர்­பி­லான சிங்­கப்­பூ­ரின் திட்­டங்­கள் குறித்து நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் 19 உறுப்­பி­னர்­கள் கேள்வி கேட்­டதையொட்டி டாக்­டர் ஜனில் இவ்­வாறு பதி­ல­ளித்­தி­ருந்­தார். தற்­போது, மக்­கள்­தொ­கை­யில் 81 விழுக்­காட்­டி­னர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்ளனர்.

இருந்தாலும் ­தடுப்­பூசி விகி­தம் ஒன்று மட்­டுமே, அடுத்த கட்­டத் தளர்­வுக்­கான நிபந்­தனை அல்ல என்­றார் அமைச்­சர் ஜனில்.

"தடுப்­பூசி விகி­தங்­க­ளைத் தவிர, நாம் கிரு­மித்­தொற்­றுச் சம்­பவங்­க­ளின் எண்­ணிக்கை, தொற்­றின் போக்கு, பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­க­ளுக்கு உட்­பட்ட நமது சமூ­கச் செயல்­பா­டு­கள், பரி­சோதனை­க­ள் நில­வ­ரம் ஆகி­ய­வற்­றை­யும் நாம் கருத்­தில்கொள்­ள­வேண்­டும்," என்று அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!