சமய நிகழ்ச்சிகளைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்

முதியோருக்கு வலியுறுத்து; அக்டோபர் 10 வரை சிறாருக்கு சமய வகுப்புகள் இல்லை

முற்­றி­லும் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்டு இருந்­தா­லும் 60 மற்­றும் அதற்­கும் அதிக வய­துள்ள முதி­யோர் சமய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டாம் என­ வலி­யு­றுத்­தப்­ப­டு­கிறது.

சிறார்­கள் சமய வகுப்­பு­களில் கலந்­து­கொள்ள தற்காலிக தடை விதிக்­கப்­படும் என்று கலா­சார, சமூக, இளை­யர் துறை அமைச்சு தெரி­வித்­தது. சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தொற்றை ஒடுக்க செப்­டம்­பர் 27 முதல் அக்­டோ­பர் 24 வரை கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் இடம்­பெ­று­கின்­றன.

அந்­தக் கட்­டுப்­பா­டு­கள் பற்றி கொவிட்-19 சிறப்­புப் பணிக்­குழு வெள்­ளிக்­கி­ழமை அறி­வித்­தது. 12 மற்­றும் அதற்­கும் குறைந்த வய­துள்ள சிறார்­க­ளுக்­கான சமய வகுப்பு­கள் போன்ற சேவை­கள் அக்­டோ­பர் 10 வரை இரண்டு வார காலம் நிறுத்தி வைக்­கப்­படும்.

இருந்­தா­லும் பாது­காப்பு நிபந்­தனை­க­ளை­யொட்டி இடம்­பெ­றும் வழி­பாட்டு நிகழ்ச்­சி­களில் சிறார்­கலந்துகொள்­ள­லாம். 12க்கும் அதிக வய­துள்­ள­வர்­கள் சமய சம்­பி­ர­தாய நிகழ்ச்­சி­கள், சமய வகுப்­பு­கள் போன்­ற­வற்­றில் தொடர்ந்து கலந்­து ­கொள்­ள­லாம்.

இருந்­தா­லும் அத்­த­கைய நிகழ்ச்­சி­களில் ஒரே நேரத்­தில் 50 பேருக்­கும் அதி­க­மானவர்­கள் கலந்­து­கொள்­ளக் கூடாது.

அப்­படி கலந்­து­கொள்­வோ­ரும் இரண்டு பேருக்கு மேல் சேர்ந்து இருக்க முடி­யாது. சமய வகுப்புகளில் கலந்து கொள்­வோர் 2 மீட்­டர் பாது­காப்பு இடை­வெ­ளி­யைக் கடைப்­பிடிக்க வேண்­டும்.

சமய அமைப்­பு­கள் கூடு­மான வரை இணை­யத்­தில் வகுப்­பு­களை நடத்த வேண்­டும் என்று அமைச்சு கேட்­டுக்­கொண்டு உள்­ளது.

ஈமச்­ச­டங்­கு­கள், ஈமச்­ச­டங்­கிற்கு முந்­தைய, பிந்­தைய சடங்­கு­களில் இம்­மா­தம் 27ஆம் தேதி முதல் எந்த ஒரு நேரத்­தி­லும் 30 பேருக்­கு மேற்­பட்­ட­வர்­கள் கலந்­து­கொள்­ளக்­கூ­டாது. அவர்­கள் இரண்டு பேருக்கு மேல் சேர்ந்து இருக்­கக்­கூ­டாது.

சமய நிகழ்ச்­சி­க­ளுக்­குத் தடை விதிக்­கப்­ப­ட­வில்லை.

என்­றா­லும் வாட்­டர்லூ ஸ்தி­ரீட்­டில் இருக்­கும் குவான் இம் தோங் ஹுட் சோ ஆல­யத்­தைப் போன்ற சில வழி­பாட்டு இடங்­கள் தற்­கா­லி­க­மாக மூடப்­ப­டு­கின்­றன.

கூட்டு வழி­பாடு மற்­றும் வழி­பாட்­டுச் சேவை­கள் தொடர்­பான வழி­காட்டி நெறி­முறைகளில் மாற்றம் இல்லை.

இந்­தக் கால­கட்­டத்­தின்­போது துப்­பு­ர­வா­ளர்­கள், தொண்­டூ­ழி­யர்­கள் உள்­ளிட்ட சமய மற்­றும் ஆத­ரவு ஊழி­யர்­கள் அனை­வ­ரும் சேவை­களில் ஈடு­ப­டு­வ­தற்கு முன்­ன­தாக சுய­மாக கொவிட்-19 பரி­சோ­தனை செய்­து­கொள்­ள­வேண்­டும் என்று அமைச்சு வலி­யு­றுத்தி உள்­ளது.

சமய அமைப்­பு­கள் தங்­கள் வழி­பாட்டு இடங்­களை, கலந்துகொள்­வோ­ருக்­கான குறிப்­பிட்ட வரம்­பு­டன் திரு­மண நிகழ்ச்­சி­க­ளுக்­குத் தொடர்ந்து பயன்­ப­டுத்­த­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!