'எஸ்பிசி' பெட்ரோல் டீசல், விலை உயர்ந்தது

'எஸ்பிசி' பெட்ரோல் டீசல், விலை உயர்ந்தது

1 mins read
b1f59b50-ac36-4d0f-95a9-76c96638c653
-

சீன நிறு­வ­ன­மான 'எஸ்­பிசி' கடந்த ஜூலை மாதத்­தி­லி­ருந்து தனது பெட்­ரோல் நிலைய எண்ணெய் விலை­யில் எந்த மாற்ற மும் செய்­ய­வில்லை. நேற்று முன்­தி­னம் அது எண்ணெய் விலையை லிட்­ட­ருக்கு நான்­கி­லி­ருந்து ஐந்து காசு வரை கூட்­டி­யுள்­ளது.

'எஸ்­பிசி'யின் '92-ஒக்­டேன்' வகை பெட்­ரோல் இப்­போது லிட்டருக்கு $2.51க்கு விற்­கப்­ப­டு­கிறது. இது, 'எசோ' நிறு­வ­னத்­துக்கு ஈடான விலை என சிங்­கப்­பூர் பய­னீட்­டா­ளர் சங்­கம் நிறு­வி­யுள்ள 'ஃபியூல் காக்கி' என்ற எண்ணெய் சில்­லறை விற்­பனை விலை ஒப்பீட்டு இணை­யத்­த­ளம் தெரி­வித்­தது.

'எஸ்­பிசி'யின் '95-ஒக்­டேன்' வகை பெட்­ரோல் இப்போது ஆகக் குறைந்த விலை­யாக லிட்­ட­ருக்கு $2.53க்கு விற்­கப்­ப­டு­கிறது.

'98-ஒக்­டேன்' வகை பெட்­ரோல் 'எசோ' நிறு­வ­னத்­துக்­கும் 'சினோ­பெக்' நிறு­வ­னத்­துக்­கும் ஈடாக $3.02க்கு விற்­கப்­ப­டு­கிறது.

'எஸ்­பிசி'யின் டீசல் எண்ணெய் விலை ஐந்து காசு உயர்ந்து, 'எசோ' நிறு­வ­னத்­துக்­கும் 'சினோ­பெக்' நிறு­வ­னத்­துக்­கும் ஈடாக $2.08க்கு விற்­கப்­ப­டு­கிறது.

இவை தள்­ளு­ப­டிக்கு முந்­தைய விலை­கள் என்பது குறிப்பிடத் தக்கது.