ஸ்கு­விட் கேம்: வினையாகும் விளையாட்டுகள்

கி.ஜனார்த்­த­னன்

'ஸ்கு­விட் கேம்' எனப் பிர­ப­ல­மாக அழைக்­கப்­படும் 'ஓஜிங்-இயோ கெயிம்' (Ojing-eo Geim) என்ற தென்­கொ­ரிய நாட­கம் பற்­றிய பேச்சு­தான் இன்­றைய தேதி­யில் எங்­கும் கேட்­கிறது.

மாறு­பட்ட கதைக்­க­ளம் இதை வேறு­ப­டுத்­திக் காட்­டு­கிறது. பணத்­திற்­காக தங்­க­ளது உயி­ரையே பணய­மாக வைத்து ஆபத்­தான விளை­யாட்­டு­களை விளை­யா­டு­வோ­ரைப் பற்­றி­யது இந்த நாட­கம்.

நெட்­ஃப்­ளிக்ஸ் தளத்­தில் செப்­டம்­பர் 27ஆம் தேதி வெளி­யீடு கண்­டது ஒன்­பது பாகங்­கள் கொண்ட இந்­நா­ட­கம். இதன் வச­னம் 2009ஆம் ஆண்­டி­லேயே எழு­தப்­பட்­டது. ஆனால் இக்­கதை அரு­வ­ருப்­பா­னது என்­றும் உண்­மை­யில் நடக்­கக்­கூ­டி­யது அல்ல என்­றும் கூறி, பல­ரும் இதைத் தயா­ரிக்க மறுத்­த­னர்.

ஒரு பக்­கம் அவர்­க­ளின் பார்­வை­யில் நியா­யம் இருந்­தா­லும் மக்­கள் ஸ்கு­விட் கேம் நாட­கத்­துக்கு பலத்த வர­வேற்பு கொடுத்­துள்­ள­னர்.

இது­வரை சுமார் 111 பில்­லி­யன் முறை நாட­கம் பார்க்கப்­ பட்­டுள்­ளது.

கதைச்­சு­ருக்­கம்

சியோங் ஜி ஹுன் என்ற இதன் முக்­கிய கதா­பாத்­தி­ரத்­துக்கு ஏகப்­பட்­ட கடன்.

வாழ்க்கை அவர் கட்­டுப்­பாட்­டில் இல்லை. பணத்­திற்­காக விளை­யாடும்படி திடீ­ரென ஒரு­வர் அணு­கும்­போது இவர் அதை ஏற்­றுக்­கொள் ­கி­றார். சியோங் கடத்­தப்­பட்டு, பெயர் தெரி­யாத தீவில், ஒரு சுரங்­கத்­தின்­கீழ் நூற்­றுக்­ கணக்­கா­னோ­ரு­டன் போட்­டி­யிடும் சூழ­லில் தள்­ளப்­ப­டு­கி­றார்.

விளை­யாட்­டில் ஒரு­வர்­தான் 45.6 பில்­லி­யன் வோன் பணத்தை (சுமார் $52 மில்­லி­யன்) வெல்ல முடி­யும்.

தோற்­றால் கொல்­லப்­ப­டு­வோம் என்ற உண்மை விளை­யாட்­டா­ளர்களுக்கு முதல் சுற்­றில்­தான் புலப்­படும். ஆனால் அவர்­கள் விளை­யாட்­டைக் கைவி­டா­மல் தொடர்­வது தான் ஆச்­ச­ரி­யம்.

பொரு­ளி­யல் ஏற்­றத்­தாழ்வு

மில்­லி­யன் கணக்­கா­னோர் இந்த நாட­கத்­தைப் பார்க்க பல கார­ணங்­கள் உண்டு என்று கூறப்­ப­டு­கிறது. சமூ­கச் சிக்­கல்­களைப் பெருக்­கிக் காட்­டும் ஒரு கண்­ணாடி என்­பது அவற்றில் ஒன்று. சமூக ஏற்­றத்தாழ்வு, வறுமை, கடன், பெண்களின் இய­லாமை போன்ற பிரச்­சி­னை­கள் இதில் பேசப்­ப­டு­கின்­றன.

பரி­சுக்­காக சக மனி­த­ரையே சாக­டிக்க இத்­தனை பேர் துணி­வது, சமு­தா­யத்­தில் மீண்­டு­வர வழி­யில்­லா­மல் நம்­பிக்கை அற்று இந்­நி­லைக்­குத் தள்­ளப்­ப­டு­வது, அள­வுக்கு அதி­க­மாக செல்­வம் படைத்­த­வர்­கள் உண்­மை­யி­லேயே மனி­தர்களின் உயி­ரு­டன் விளை­யாடி வக்­கி­ர­மாக ரசிப்­பது போன்ற அவ­லங்­களும் காட்­டப்­ப­டு­கின்­றன.

பொரு­ளி­யல் ஏற்­றத்­தாழ்­வால் நடுத்­தர மக்­கள் கட­னா­லும் பல்­வேறு பிரச்­சினை களா­லும் சிர­மப்­ப­டு­வ­தைப் பணம் படைத்­தோர் பொருட் படுத்­து­வ­தில்லை என்ற எண்­ணப்­போக்­குப் பிர­ப­ல­மாகி வரு­வதை 'மூடிஸ்' கடன் நிறு­வ­னத்­தில் பணி­யாற்­றும் ஆய்­வா­ளர் கும­ரே­சன் சுப்­பி­ர­ ம­ணி­யன், 32, சுட்­டி­னார்.

"வசதி குறைந்­த­வர்­கள் சோம்­பே­றி­கள் என்­றும் அவர்­கள் உழைக்க மறுக்­கின்­ற­னர் என்­றும் சிலர் குறை­கூ­று­வது உண்டு. ஆனால், வறுமையால் ஏற்படும் இக்­கட்டை கதா­பாத்­தி­ரங்­கள் எடுக்­கும் ஆபத்­தான முடிவுகள் காட்­டு­கின்றன.

"ஒரு சில­ரிடம் மட்டுமே பெரு­ம் பணமுள்ள முத­லா­ளித் ­துவ சமு­தா­யம் இதற்கு முக்­கிய கார­ணம் என்று கருது கி­றேன்," என்றார் சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பொரு­ளி­யல் பட்­டம் பெற்ற திரு கும­ரே­சன்.

விளை­யாட்­டு­களில் மடி­ பவர்­க­ளுக்­கும் அவற்றை நடத்து­ப­வர்­க­ளுக்­கும் உள்ள ஓர் ஒற்­று­மையை நிகழ்ச்­சி­யின் இறு­திப் பாகம் விளக்­கு­கிறது.

இரு பிரி­வி­ன­ருக்­கும் வாழ்க்கை பொருள் அற்­ற­தாக மாறு­கிறது. பண­மில்­லா­மல் போனா­லும் அள­வுக்கு அதிக மான பணம் இருந்­தா­லும் இதே நிலை­தான் என்று ஒரு கதா­பாத்­தி­ரம் சொல்­லு­வ­தைச் சுட்­டிய திரு கும­ரே­சன், இதை உள­வி­யல் ரீதி­யில் பார்க்க வேண்­டும் என்­றார்.

"இதனை ஆங்­கி­லத்­தில் கத்­தார்­சிஸ் (catharsis) என்­பார்­கள். எந்­தத் துன்­ப­மும் அனு­ப­விக்­கா­த­வர்­கள் சிலர், ஏதோ ஒரு பிரச்­சினை அல்­லது அபா­யத்தை மூட்­டி­விட்டு அதன் மூலம் உயிர் வாழும் உணர்­வைப் பெறு­கின்­ற­னர்," என்று கூறிய திரு கும­ரே­சன், இந்த உணர்வை சாதா­ரண வாழ்க்­கை­யில் புரிந்­து­கொள்­வது கடி­ன­மாக இருக்­க­லாம் என்று தெரி­வித்­தார்.

சிறு­மைப்­ப­டுத்­தப்­ப­டு­தல்

'ஸ்கு­விட் கேம்' தொட­ரில் சிறார்க்­கான விளை­யாட்­டு­கள், மாண­வர்­கள் அணி­யும் விளை­யாட்டு உடை­கள், பிள்­ளை­க­ளைக் கவ­ரும் வண்­ணங்­கள் நிறைந்த இடங்­கள் போன்ற அம்­சங்­க­ளின் வழி போட்­டி­யா­ளர்­கள் அனை­வ­ரும் பிள்­ளை­கள் ஆக்­கப்­ப­டு­வது இந்­நி­கழ்ச்சி பயன்­ப­டுத்­தும் மற்­றோர் உத்தி.

பணம் இல்­லா­த­வன் பிணம் என்­கிறது ஒரு பழ­மொழி. இங்கு பணம் இருப்­ப­வர்­கள் தான் தங்­கள் வாழ்க்­கை­யைத் தீர்­மா­னிக்க முடிந்த பெரி­ய­வர்­கள் என்ற சமூ­கக்­க­ருத்து சித்­தி­ரிக்­கப்­ப­டு­கிறது.

சிறு­வர்­க­ளாக இருந்­த­போது அனு­ப­வித்த வெற்றி, தோல்வி, அவ­மா­னங்­கள் ஆகி­ய­வற்றை நினைவு படுத்­தும் விளை­யாட்­டு­கள், பிள்­ளைப்­ப­ரு­வத்­தில் ஏற்­பட்ட துன்­பத்தை பல­ருக்­கும் நினை­வூட்­ட­லாம்.

"முன்­னேற வழி­யில்­லா­த­வர்­கள் தங்­க­ளது வாழ்க்­கை­யின் தொடக்­கத்­திற்­குத் தள்­ளப்­படும் உணர்வை இந்த நாட­கம் காட்­டு­கிறது," என்று உள­வி­யல் ஆர்­வ­லர் புவ­னேஸ்­வரி சண்­மு­கம், 30, தெரி­வித்­தார்.

பாலி­னப் பாகு­பாடு

'ஸ்கு­விட் கேம்' விளை­யாட்­டு­களில் பெண்­க­ளை­விட ஆண்­களே அதி­கம் பங்­கேற்­றுள்­ள­னர். ஆனால் இந்த விளை­யாட்­டில் பெண்­கள், ஆண்­க­ளை­விட அதிக அபா­யத்தை எதிர்­நோக்­கு­கின்­ற­னர். உடல் வலிமை தேவைப்­படும் அங்­கங்­களில் அவர்­கள் வீழ்த்­தப்­ ப­டு­கின்­ற­னர்.

நாட­கத்­தில் உள்ள பெண்­கள் அறத்­திற்­காக உயி­ரையே இழப்­ப­வர்­க­ளாக இருந்­த­போ­தும், ஆண்­க­ளின் இயற்­கை­யான உடல் வலிமை அவர்­ க­ளுக்­குச் சாத­க­மாக இருப்­ ப­தைக் காண்­கி­றோம்.

எளி­யோ­ருக்­குப் பரிவு காட்­டும் பண்பு நீங்­கி­னால் சமு­தா­யம் வலி­ய­வ­ரின் விளை­யாட்­டுக் கள­மாக மாற­லாம்.

வாழ்க்­கை­யில் சறுக்கி விழு­ப­வர்­க­ளுக்கு நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­து­வது ஒட்­டு­மொத்­தச் சமூ­கத்­தின் கடமை என்ற நல்ல பாடத்­தை­யும் 'ஸ்கு­விட் கேம்' நாட­கத் தொடர் உணர்த்­து­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!