ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தில் பிரதமர் லீ

இணையவழிக் கூட்டத்தில் கொவிட்-19,

மியன்மார் விவகாரங்கள் பற்றி கலந்துரையாடப்படும்

பிர­த­மர் லீ சியன் லூங் இன்று முதல் வரும் வியா­ழக்­கி­ழமை 28ஆம் தேதி வரை நடை­பெ­றும் ஆசி­யான் உச்­ச­நி­லைக் கூட்­டத்­தி­லும் மற்ற சந்­திப்­பு­க­ளி­லும் வட்­டா­ரத் தலை­வர்­க­ளை­யும் உலக நாடு­க­ளின் தலை­வர்­க­ளை­யும் சந்­தித்­துப் பேசு­வார். கொவிட்-19 கிரு­மிப் பர­வல் சூழ­லில் அந்த உச்­ச­நி­லைக் கூட்­டம் தொடர்ந்து இரண்­டா­வது ஆண்­டாக இணை­யம் வழி­யாக நடை­பெ­று­கிறது.

இம்­முறை அதன் சந்­திப்­பு­கள் எல்­லாம் ஒன்று சேர்க்­கப்­பட்­டுள்­ளன. உச்­ச­நி­லைக் கூட்­டத்­தின் இவ்­வாண்­டுக்­கான கருப்­பொ­ருள் 'நாம் பரிவு காட்­டு­கி­றோம், நாம் ஆயத்­த­மாக உள்­ளோம், நாம் வளம் பெறு­வோம்' என்­ப­தா­கும்.

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லி­லி­ருந்து மீட்­சி­ய­டை­யும் பணி­கள் குறித்து உச்­ச­நிலை கூட்­டத்­தில் பெரி­தும் பேசப்­படும்.

ஆசி­யா­னும் மற்ற பங்­காளி நாடு­களும் அனைத்­து­ல­கச் சமூ­க­மும் சேர்ந்து மேலும் வலு­வான பொதுச் சுகா­தார கட்­ட­மைப்­பு­கள், விநி­யோ­கச் சங்­கி­லி­கள், பொரு­ளி­யல்­களை உரு­வாக்­கும் வழி­கள் பற்றி ஆசி­யான் தலை­வர்­கள் கலந்­து­பே­சு­வார்­கள் என்று பிர­த­மர் அலு­வ­ல­கம் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தது. இவை கிரு­மிப் பர­வலிலி­ருந்து மீள்­வ­தற்­கும் வருங்­கால நெருக்­க­டி­க­ளைச் சமாளிக்க ஆயத்­தம் ஆவ­தற்­கும் வழி­கள் காண்­பது அதன் நோக்­கம்.

"அத்­து­டன், வட்­டார, அனைத்­து­லக நிகழ்­வு­க­ளைப் பற்­றிய கருத்துகளை அவர்­கள் பரி­மாறிக்­ கொள்­வர். வட்­டார ஒத்­து­ழைப்­பை­யும் ஆசி­யா­னின் முக்­கி­யத்­து­வத்­தை­யும் அமைதி நிலைத்­தன்மை ஆகி­ய­வற்றை மேம்­ப­டுத்­தும் முயற்­சி­க­ளைப் பற்­றி­யும் அவர்­கள் கலந்­து­பே­சு­வர்," என்று பிரதமர் அலுவலகம் கூறியது.

மியன்மார் அரசியல் விவகாரம் பற்றியும் ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தில் பேசப்படும் என்று கருதப்படுகிறது.

இந்த வாரம் நடைபெறும் கூட்டங்களுக்கு மியன்மார் ராணுவத் தலைவர் மிங் ஆங் ஹிலாய்ங்கைத் தவிர்த்துவிட்டு, அரசியல் சார்பற்ற பிரதிநிதியை ஆசியான் அழைத்துள்ளது.

மூன்று நாட்கள் நடைபெறும் கூட்டங்களுக்கு புருணை மன்னர் ஹாசானா போல்கியா தலைமை வகிப்பார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!