லேக்சைட், சைனீஸ் கார்டன் எம்ஆர்டி நிலையங்களை இணைக்கும் சைக்கிள் பாதை திறப்பு

லேக்­சைட், சைனீஸ் கார்­டன் எம்­ஆர்டி நிலை­யங்­களை இணைக்­கும் புதிய 5.6 கிலோ மீட்­டர் நீள­முள்ள சைக்­கிள் பாதையை தாமான் ஜூரோங் குடி­யி­ருப்­பா­ளர்­கள் இனி பயன்­ப­டுத்தி அவ்­வட்­டா­ரத்­தில் உள்ள பள்­ளி­கள், பூங்­காக்­கள், சந்­தை­கள் ஆகி­ய­வற்­றுக்­குச் செல்­ல­லாம். புதிய பாதை ஜூரோங் லேக் வட்­டா­ரத்­தில் உள்ள 15 கிலோ மீட்­டர் கட்­ட­மைப்­பு­டன் இணை­கிறது.

இத­னால் ஜூரோங் ஈஸ்ட்டை 30 நிமி­டங்­க­ளுக்­கும் குறை­வான நேரத்­தில் குடி­யி­ருப்­பா­ளர்­கள் அடைந்­து­வி­ட­லாம் என்று நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் நேற்று தெரி­வித்­தது. அடுத்த சில மாதங்­களில் தெம்­ப­னிஸ் வட்­டா­ரத்­தில் மற்றொரு 4 கிலோ மீட்­டர்

நீள­முள்ள சைக்­கிள் பாதை திறக்­கப்­படும். அதை­யும் சேர்த்து சிங்­கப்­பூ­ர் எங்­கும் உள்ள சைக்­கிள் பாதை­க­ளின் மொத்த தூரம் ஏறத்­தாழ 500 கிலோ மீட்­ட­ரா­கும் என்று ஆணை­யம் கூறி­யது. நக­ரங்­க­ளுக்கு இடை­யி­லான இணைப்பை மேம்­ப­டுத்த இந்­தச் சைக்­கிள் பாதை­கள் அமைத்­துத் தரப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்குப் பாது­காப்­பான பய­ணப் பாதை வழங்­க­வும் சைக்­கிள் பாதை­கள் திறக்­கப்­ப­டு­வ­தாக ஆணை­யம் தெரி­வித்­தது. 2030ஆம் ஆண்டுக்குள் 1,300 கிலோ மீட்டர் தூரமுள்ள சைக்கிள் பாதைகளைக் கொண்டிருக்க சிங்கப்பூர் இலக்கு கொண்டுள்ளது.

ஜூரோங் சைக்கிள் பாதையை ஜூரோங் குழுத் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் தர்மன் சண்முகரத்னம் நேற்று திறந்து வைத்தார். சைக்­கிள் ஓட்­டி­களும் பாத­சா­ரி­களும் அரு­க­ருகே பாது­காப்­பான முறை­யில் பய­ணம் செய்ய கூடு­தல் இடம் அமைத்­துத் தரப்­பட்­டுள்­ள­தாக அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!